அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோயிலில் மொட்டை எடுத்தல், அலகு குத்துதல், காவடி எடுத்தல் என பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடன்களை செலுத்தி வருகின்றனர். தமிழ்க்கடவுள் என்று அழைக்கப்படும் முருகனுக்கு அறுபடை வீடுகள் உள்ளது. இந்த அறுபடை வீடுகளில் மூன்றாம் படை திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ தண்டாயுதபாணி திருக்கோயிலாகும்.


Rahul Gandhi: ”ஏன் பஸ், டிரக் டிரைவரிடம் கட்டுரையை கேட்பதில்லை”.. புனே போர்ஷே விபத்து குறித்து ராகுல் காந்தி கேள்வி!




தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து பாதயாத்திரையாக பழனிக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்வார்கள். அந்த வகையில் அறுபடை வீடுகளில் ஒன்றான உலகப் பிரசித்தி பெற்ற பழனி மலை முருகன் கோயிலில் கந்த சஸ்டி விரதம் மற்றும் தைப்பூசம் என முருகனுக்கு உகந்த பல்வேறு திருவிழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றது. 




அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி முருகன் கோயிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 16 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி பத்து நாட்கள் நடைபெற்று வருகிறது. அருள்மிகு வள்ளி, தேவசேனா சமேதர் முத்துக்குமாரசாமிக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட சோடஷ திரவ்ய பூஜைகள் நடத்தப்பட்டு சோடஷ தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் கலசங்கள் வைக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டு கலசபூஜை, வாத்யபூஜைகள் நடத்தப்பட்டது.


Olympics: ஒலிம்பிக் போட்டிகள் : இந்தியா முதல் தங்கப்பதக்கத்தை வென்ற கதை




பின்னர் சுவாமிக்கு பச்சை சாத்துப்படி, பட்டு சாத்துபடி நடத்தப்பட்டு சங்கல்பம் நடைபெற்றது. மேளதாளம் முழங்க மாங்கல்யம் அணிவிக்கப்பட்ட பின் பக்தர்களுக்கு மங்கல பிரசாதங்கள், சர்க்கரை பொங்கல், எலுமிச்சை சாதம் ஆகியன வழங்கப்பட்டது. திருக்கல்யாணத்தை  ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதைத் தொடர்ந்து பக்தர்கள் கூட்டமாக பழனிக்கு பால்குடம், பாதயாத்திரையாக காவடி எடுத்து கிரிவலப் பாதையில் ஆடிபாடி  வந்தனர்.




பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தான நிர்வாகம் மலைக் கோயிலுக்கு சென்று வர யானை பாதை வழியாக மலைக் கோவிலுக்கு செல்லவும், படிப்பாதை வழியாகவும் கீழே இறங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கோவில் நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. வருகின்ற 25 ம் தேதி கொடியிறக்கத்துடன் வைகாசி விசாக திருவிழா நிறைவடைகிறது.