கண்மாயின்  உபரி நீர் செல்லும் மருகால் பகுதியில் 5 அடி உயரத்திற்க்கு மணல் மூடைகளை கொண்டு அடுக்கி நீரை தேக்கியதால் 100க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்ட நெல், வாழை, பருத்தி, வெண்டி உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கி சேதம். கண்மாயில் மீன் வளர்க்கும் குத்தகைதாரர்கள் நீர் மட்டத்தை உயர்த்தி தேக்கியதால் தொடர்ந்து விவசாயம் பாதித்து வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுவதோடு பொதுப்பணித்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையும் விடுத்துள்ளனர்.


TN RAIN: ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்ற குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி.. எங்கெல்லாம் கனமழை?


தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள பொம்மிநாயக்கன் பட்டி பகுதியில் உள்ளது வேட்டுவன் கண்மாய். பருவ மழையால் கடந்த 10 நாட்களுக்கு முன்பே அதன் முழு அளவை எட்டிய நிலையில் உபரி நீர் அனைத்தும் அதற்க்கு கீழ் உள்ள ஓட்டக்குளம், மற்றும் புதுக்குளத்திற்கு நீர் சென்று இரண்டு குளங்களும் நிறைந்தது. இந்நிலையில் வேட்டுவன் கண்மாயில் மீன் வளர்க்கும் குத்தகைதாரர்கள் உபரி நீர் வெளியேற்றும் மருகால் பகுதியில் 4 முதல் 5 அடி உயரத்திற்க்கு மணல் மூட்டைகளை கொண்டு அடைத்து நீர் தேக்கும் நடவடிக்கை மேற்கொண்டதால் கண்மாயின் முழு கொள்ளவை காட்டிலும் 5 அடி உயரத்திற்க்கு நீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.


Rasipalan November 19: ரிஷபத்துக்கு சோர்வு... மேஷத்துக்கு அமைதி... உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் இவைதான்!


கண்மாயில் 5 அடி உயரத்திற்கு அதிக அளவில் நீர் தேக்கி வைத்ததால் கண்மாயின் மேற்பகுதியில் உள்ள 100க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்ட நெல், வாழை, பருத்தி, வெண்டை உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்து வருகிறது. இதில் முப்பது நாட்களுக்கு முன்பு நடவு செய்த நெற்பயிர்கள் முழுவதும் நீரில் மூழ்கி அழுகி சேதம் அடைந்ததாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.


FIFA WORLDCUP 2022: திருவிழாவில் கலக்கவிருக்கும் ஒன் அண்ட் ஒன்லி டாப் 10 கோல் கீப்பர்ஸ்?


மேலும் அந்த பகுதியில் நடவு செய்யப்பட்ட வாழை, பருத்தி, வெண்டைக்காய் உள்ளிட்ட பயிர் வகைகள் முற்றிலும் நீரில் மூழ்கி சேதம் அடைந்து வருவதால் விவசாயிகள் செய்வதறியாது உள்ளனர். இது குறித்து கடந்த 10 ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகத்திடமும் பெரியகுளம் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் நீர் தேங்கி நெற்பயிர்கள் சேதம் அடைவது தொடர்வதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். 


எனவே மாவட்ட நிர்வாகமும், பொதுப்பணித்துறை அதிகாரிகளும் வேட்டுவான் கண்மாயில் நீர் வெளியேரும் மருகால் பகுதியில் உள்ள மண் மூட்டைகளை அகற்றி  நெற்பயிர்கள் நீரில் மூழ்காமல் தடுக்க தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என  பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண