ஆன்லைன் ரம்மி விளையாடுவதற்காக பணம் கேட்டு கணவர் மிரட்டியதாகவும், கணவர் மீது உயிர் இழந்த பெண் மற்றும் பெற்றோர் புகார் கொடுத்தும் காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 




தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை பகுதியைச் சேர்ந்த முத்துப்பாண்டி (வயது 30) என்பவருக்கும் பெரியகுளம் தென்கரை பகுதியை சேர்ந்த மனோன்மணி (வயது 27) என்ற பெண்ணிற்கும் கடந்த 2022 ஆம் ஆண்டு பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் முடிந்துள்ளது.


"ஆளுநர் பதவியை ஒழிக்க வேண்டும்" திமுகவை பின்பற்றி ஒரே போடு போட்ட காங்கிரஸ்!


திருமணம் முடிந்த ஒரு  மாதத்தில் பெண் கழுத்தில் அணிந்திருந்த 30 பவுன் நகையை கணவர் முத்துப்பாண்டி வாங்கி விற்று ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும், அதன் பின் சுற்றியுள்ள உறவினர்களிடம் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் வாங்கி ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் விட்ட நிலையில்  கணவரின் செயல் குறித்து பெரியகுளம் காவல் நிலையத்தில் மனோன்மணி மற்றும் அவரது பெற்றோர் ஓராண்டிற்கு முன்பு   புகார் கொடுத்ததாக கூறப்படுகிறது.




மேலும் கணவர் முத்துப்பாண்டி வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும், இது தொடர்பாகவும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்ட பெண் மனோன்மணி  கடந்த 5 தினங்களுக்கு முன்பாக எலி பேஸ்ட் சாப்பிட்ட நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற நிலையில் நேற்று மாலை வீட்டிற்கு பெண்ணை கொண்டு வந்த போது  உயிரிழந்து  உள்ளார்.


Atlee Next Movie : வாவ்.. சூப்பர் அப்டேட்.. அட்லீ இயக்கத்தில் சல்மான் கான், கமல்ஹாசன்...


இது தொடர்பாக பெரியகுளம் தென்கரை காவல் பெண்ணின் தாய் கொடுத்த புகாரின் அடிப்படையில்  உயிரிழந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.




ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் நகை மற்றும் பத்து லட்ச ரூபாய்க்கு மேல் கடன் ஏற்பட்ட நிலையில் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியது குறித்தும்  காவல்துறையினரிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில் வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்ட பெண் எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை செய்துள்ளது பெரியகுளம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



மக்களே கவனம்.. விநாயகர் சதுர்த்திக்கு சிலை வைக்க கட்டுப்பாடு.. உயர் நீதிமன்றம் உத்தரவு!


மேலும் உயிரிழந்த பெண்ணின் தாய் கூறுகையில், தன் மகள் உயிரிழப்புக்கு காரணம் ஆன்லைன் சூதாட்டம் என்றும்,  முறையாக விசாரிக்காமல் பெண் கொடுத்ததால்  தற்பொழுது தன் மகளை இழந்துள்ளதாகவும், இது போன்ற நிகழ்வு பெண் வீட்டார் மணமகனின் நடவடிக்கை குறித்து நல்ல விசாரணை செய்து பெண் கொடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளதோடு, தன் மகள் தற்கொலைக்கு காரணமான முத்துப்பாண்டியை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.


Suicidal Trigger Warning..


வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்க்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,


எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,


சென்னை - 600 028.


தொலைபேசி


எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)