கொலை சம்பவம் குறித்து அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்த பிரவீன் உறவினர்கள்  மதுரை - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


தொடர் குற்ற சம்பவங்கள் சிவகங்கையில்


சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி, காளையார்கோவில் என குறிப்பிட்ட சில இடங்களில் அதிகளவு குற்ற சம்பவங்கள் நடைபெறுகிறது. குறிப்பாக சாதிரீதியான மோதல், பழிக்குப் பழி, கள்ளத்தொடர்பான மோதல், போதைப் பொருட்கள் பயன்பாடு என பல்வேறு சட்ட விரோத நடைபெறுகிறது. காவல்துறையினரும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனாலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. பட்டா கத்தி மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் மிரட்டல்விடுத்து வீடியோ வெளியிடும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் குற்றவாளிகள் மீது துப்பாக்கி சூடு நடைபெற்றது. இந்நிலையில் இளைஞர் ஒருவர் மர்ம கும்பலாள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் சிவகங்கை மாவட்டத்தில் மீண்டும் பரபரப்பை கிளப்பியுள்ளது.


- Vande Bharat Fare: தென் மாவட்டங்களுக்கு 2 வந்தே பாரத் ரயில் சேவை - டிக்கெட் விலை எவ்வளவு?


ஊருக்கு வந்த இளைஞர் கொலை


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கீழப்பசலை பகுதியைச் சேர்ந்த ராஜா மகன் பிரவீன்குமார் (22). இவர் நேற்று இரவு கோயம்புத்தூரி லிருந்து தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். மானாமதுரை பேருந்து நிலையத்தில் இருந்து அவரது நண்பர்கள் 3 பேருடன் இருசக்கர வாகனத்தில் கீழப்பசலை கிராமத்துக்கு சென்றதாகவும், அப்போது இவர்களை  வழிமறித்த மர்ம நபர்கள்  தாக்க முயற்சித்ததாகவும்,  4 பேரும் தப்பிசெல்ல முயன்ற போது, பிரவீன்குமார் அந்த கும்பலிடம் சிக்கியுள்ளார். இவரை  தீயனூர் பகுதிக்கு கொண்டு சென்று வெட்டிப் படுகொலை செய்துவிட்டு மர்ம கும்பல் தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது.


கொலையை கண்டித்து உறவினர் சாலை மறியல்


தகவல் அறிந்து  சம்பவ இடத்துக்கு சென்ற மானாமதுரை காவல்துறையினர் இளைஞரின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக  சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்த பிரவீன் உறவினர்கள்  மதுரை-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


குற்றங்களை குறைக்க ஆலோசனை நடத்த வேண்டும்


இது குறித்து சிவகங்கை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் நம்மிடம் கூறுகையில்...,” சிவகங்கை மாவட்டத்தில் குற்ற சம்பவங்கள் தொடர்கிறது. இதனை காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை கொண்டு தடுக்க வேண்டும். குற்றவாளிகளை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். அப்போது தான் குற்ற சம்பவங்கள் ஓரளவு குறைந்து மக்கள் நிம்மதியாக வாழ முடியும். அதே போல் மாவட்ட நிர்வாகம் சிவகங்கை மாவட்டத்தில் வேலை வாய்ப்புகளை அதிகப்படுத்த வேண்டும். வேலையின்மை காரணமும் குற்ற சம்பவம் அதிகரிப்பதற்கான முக்கிய  காரணமாக அமைக்கிறது. தொடர்ந்து காவல்துறையினர் கூட்டம் நடத்தி ஆலோசனைகள் அடிப்படையில் செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.


இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - சபாஷ்! அனைத்து அலுவலகங்கள், பொது இடங்களிலும் தாய்ப்பால் அளிக்க தனி அறை.. எடுத்துக்காட்டான ஒடிசா


மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - NIT Trichy: என்ஐடி மாணவியிடம் பாலியல் அத்துமீறல்; வருத்தம் தெரிவித்த கல்லூரி நிர்வாகம்!