தேனி மாவட்டம் பெரியகுளம் உட்கோட்டம் தேவதானப்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கெங்குவார்பட்டியில் உள்ள உசையப்பா ராவுத்தர் தெருவை சேர்ந்த மாரிமுத்து  தம்பதியினர் (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) கடந்த 17.11.20ம் தேதி 08.30 மணியளவில் மனநலம் பாதிக்கப்பட்ட தனது மகளை தான் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து தனது வீட்டிற்கு அருகில் வசிக்கும் ராஜா(எ) நரி (35) த.பெ.மூக்கையா,  என்பவர் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக அனைத்து மகளிர் காவல் நிலையம் தேனியில் புகார் தெரிவித்துள்ளார்.


Uttarkashi Tunnel Rescue: 17 நாட்கள் இருட்டில் நடந்தது என்ன? - விவரிக்கும் மீட்கப்பட்ட தொழிலாளி விஸ்வஜீத் குமார்




இது சம்மந்தமாக மனுதாரர் கொடுத்த புகாரின் பேரில் தேனி அனைத்து மகளிர்காவல் நிலைய குற்ற எண் 19/20 பிரிவு 5(k), 6 of POCSO Act @ 6(1), 5(k) of POCSO Act இந்திய தண்டனை சட்டப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணையில் சிறுமியின் வீட்டிற்கு அருகில் இருக்கும் ராஜா (எ) நரி (35) என்பவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்ததால் 11.10.21 தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் விசாரணையை முடித்து இறுதியறிக்கை 31.01.2021 அன்று தாக்கல் செய்யப்பட்டு மேற்படி வழக்கு விசாரணை தேனி மாவட்ட குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் சட்டத்தின் கிழான வழக்குகளை விசாரிக்கும் முகன்மை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில்,


Latest Gold Silver Rate: ஒரே நாளில் வரலாறு காணாத விலை ஏற்றத்தில் தங்கம்! அதிர்ச்சியில் பொதுமக்கள்.. எவ்வளவு தெரியுமா?




மேற்படி எதிரி ராஜா (எ) நரி (35) த.பெ.மூக்கையா,என்பவரை தேனி மாவட்ட குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் சட்டத்தின் கீழான வழக்குகளை விசாரிக்கும் முதன்மை சிறப்பு நீதிமன்ற நீதிபதி  கணேசன் அவர்களால் 28.11.2023ம் தேதி குற்றவாளி என அறிவித்து, எதிரிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் அபராத தொகையாக குபாய் 10,000/- விதித்தும், அபாரதத்தை கட்ட தவறினால் 2ஆண்டுகள் கடுங்காவல் சிறைதண்டணையும் விதித்து தீர்ப்பளித்தார்.


Sembarambakkam Lake: சென்னை மக்களே உஷார்..! செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திறந்துவிடப்பட்டது 1,000 கன அடி உபரிநீர்!




திறம்பட வாதுரைத்த அரசு தரப்பு வழக்கறிஞர் தவமணிசெல்வி, இவ்வழக்கில்அவர்களையும், இவ்வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்த தேனி அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் தி மங்கையர்திலகம் அவர்களையும், வழக்கின் சாட்சிகளை உரிய நேரத்தில் ஆஜர்படுத்திய தற்போதைய தேனி அனைத்து மகளிர்காவல் நிலைய ஆய்வாளர் பொறுப்பு தேனி காவல் ஆய்வாளர் மங்கையர் திலகம். மற்றும் நீதிமன்ற பெண் தலைமை காவலர் ஜெயா1825 அவர்களையும் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவிண் உமேஷ்டோங்கரே, அவர்களையும்  வெகுவாக பாராட்டியுள்ளார்.