தேனி மாவட்டம் கம்பம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சுருளி அருவி சுற்றுலாத் தலமாகவும், ஆன்மீக தலமாகவும் விளங்கி வருகிறது. இந்த அருவியில் ஏராளமான பொதுமக்கள் குளித்துவிட்டு சாமி தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம். இந்நிலையில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கனமழை பெய்து வருகிறது . இதனால் சுருளி அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளான அரிசி பாறை, ஈத்தக்காடு, தூவானம் அணை பகுதியில் கனமழை பெய்து வருகிறது.


Wayanad Landslide: கேரளா - வயநாடு பகுதியில் பெரும் நிலச்சரிவு - 36 பேர் உயிரிழப்பு - நூற்றுக்கணக்கானோர் மாயம்..!




இதனால் வனப்பகுதியில் உள்ள ஆற்றில் நீர் வரத்து அதிகரித்து அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிப்பதற்கு வனத்துறையினர். தொடர்ந்து தடை விதித்து உள்ளனர். அருவிப் பகுதியில் கன மழை பெய்து வருவதால் பொதுமக்கள் யாரும் வர வேண்டாம் என வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.


Ola Electric Bike: ஓலாவின் முதல் எலெக்ட்ரிக் பைக் தயார்..! எப்போது சந்தைக்கும் வரும் தெரியுமா? சிஇஒ அறிவிப்பு


மேற்கு தொடர்ச்சி மலை குரங்கணி வனப்பகுதியில் பெய்த மழை காரணமாக கொட்டக்குடி ஆற்றில் நீர் வரத்து அதிகரிப்பு. நீர் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கொட்டகுடி ஆற்றில் குளிக்கவோ கால்நடைகளை குளிப்பாட்டவோ கடக்கவோ முயற்சிக்க வேண்டாம் என பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


Breaking News LIVE, July 30: ஒவ்வொரு வாரமும் ரயில் விபத்துகள் நடக்கின்றன - மம்தா பானர்ஜி ஆவேசம்


தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி வனப்பகுதிகளில் நேற்று இரவு பெய்த தொடர் மழை காரணமாக கொட்டக்குடி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து அணை பிள்ளையார் தடுப்பணையில் நீர்வரத்து அதிகரித்து ஆர்ப்பரித்து செல்கிறது. கடந்த 15 நாட்களுக்கும் மேலாக மழை பொழிவு இல்லாமல் நீர்வரத்து குறைந்து காணப்பட்ட கொட்டக்குடி ஆற்றில் நேற்று இரவு பெய்த மழை காரணமாக அதிக அளவில் தண்ணீர்  செல்கிறது.




அதிக அளவில் வரும் தண்ணீரானது போடி பகுதியில் உள்ள குளங்களுக்கு ராஜ வாய்க்கால் மூலம் அனுப்பப்பட்டு வரும் நிலையில் உபரி நீரானது  அணைக்கட்டு நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்துக் கொண்டு வைகை அணைக்கு செல்கிறது. பொதுமக்களின் பாதுகாப்பு கருதி பொதுப்பணித்துறையினர் கொட்டக்குடி ஆற்றில் குளிக்கவோ கால்நடைகளை குளிப்பாட்டவோ கடக்கவோ முயற்சிக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.