Breaking News LIVE, July 30:வயநாடு நிலச்சரிவு: நீலகிரியில் இருந்து மருத்துவர்கள் குழு - அமைச்சர் மா.சுப்ரமணியன்
Breaking News LIVE, July 30: கேரளா நிலச்சரிவு மற்றும் பாரிஸ் ஒலிம்பிக் உள்ளிட்டவை தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிந்துகொள்ள, ஏபிபி செய்தி இணைய செய்திதளத்துடன் இணைந்திருங்கள்.
வயநாடு நிலச்சரிவு - இதுவரை 123 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்
சென்னை, காஞ்சிபுரம், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி உட்பட 27 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு -சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு!
வயநாடு நிலச்சரிவு: இந்திய ராணுவத்தின் Madras Regiment-ஐ சேர்ந்த 122 காலாட்படை வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்
"வயநாடு நிலச்சரிவு நிவாரணப் பணிகளுக்காக நீலகிரியில் இருந்து 10 மருத்துவர்கள் கொண்ட குழு வயநாட்டிற்கு சென்றுள்ளது. தேவைகளைக் கண்டறிந்து மனிதாபிமான முறையில் தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலோடு மக்கள் நல்வாழ்வுத் துறை செயல்படும்!" -மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்
வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த மற்றொரு கல்யாணசுந்தரம் என்னும் தமிழரின் உடல் கண்டெடுப்பு!
Breaking News LIVE, July 30: கேரள நிலச்சரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த காளிதாஸ் மற்றும் கல்யாண்குமார் ஆகிய 2 பேர் உயிரிழந்துள்ளனர். கல்யாண்குமார் நீலகிரியைச் சேர்ந்தவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கேரளா: வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த காளிதாஸ் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி அறிவித்தார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ₹3 லட்சம் வழங்கிட உத்தரவு.
தமிழ்நாட்டில் சிக்கன் குனியா வியாதியால் 331 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
வயநாட்டில் தற்போது வானிலை சீரான நிலையில் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணிகள் மீண்டும் தொடங்கியது.
கேரள-வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில், இதுவரை 93 உடல்களை மீட்டுள்ளோம், ஆனால் எண்ணிக்கை மாறலாம். 128 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 34 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் மிகப்பெரிய அணையான மேட்டூர் அணை 43வது முறையாக 120 அடியை எட்டியுள்ளது.
வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் 600 பேரின் கதி என்ன? என்று பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் உடல்களில் இதுவரை 37 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Breaking News LIVE, July 30: கேரளம் வயநாடு நிலச்சரிவு: 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி வரும் நிலையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதை பொருள் கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட திமுக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்; ரூ.70 கோடி மதிப்புள்ள மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட திமுக நிர்வாகி சையது இப்ராஹிம் கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு
வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 80 நபர்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 100 ஆக அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
கேரளாவின் வயநாட்டில் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் அடுத்த 24 மணி நேரத்தில், ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!
வயநாடு நிலச்சரிவு குறித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் பேச்சு நிவாரணப் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு ₹5 கோடியை வழங்க உள்ளது. மேலும், மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இருவர் தலைமையில் ஒரு குழு அங்கு செல்ல இருக்கிறது
வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிக்கு மாயா மற்றும் மர்பி என்ற போலீஸ் நாய்கள் அழைத்துச் செல்லப்படுகின்றன. மாயா மற்றும் மர்பி ஆகியவை நிலத்தடியில் இருந்து மனித உடல்களை கண்டுபிடிக்க பிரத்யேகமாக பயிற்சி பெற்றுள்ளன. இந்த நாய்களுக்கு 30 அடி தூரத்தில் இருந்து மனித உடல்களை கண்டறிய பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் பெட்டிமுடி பேரிடரில் 8 கண்டெடுத்தது மாயா என்ற போலீஸ் நாய்தான்.
கேரள வெள்ள பாதிப்புகள் குறித்து அம்மாநில முதல்வர் பினராயி விஜயனை தொடர்பு கொண்டு பேசினார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்
கேரளாவிற்கு முதற்கட்டமாக 5 கோடி ரூபாயை ஒதுக்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
கேரளாவிற்கு எல்லா விதமான உதவிகளையும் தமிழ்நாடு அரசு உடனடியாக செய்யும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
சமீரன் மற்றும் ஜானி டாம் வர்கீஸ் ஆகிய இரண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தலைமையில் மீட்பு குழு அனுப்பப்பட்டுள்ளது : முதல்வர்
நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் : மக்களவையில் ராகுல் காந்தி
நிலச்சரிவால் ஏற்பட்ட பகுதிகளில் 250-க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் எனத் தகவல் வருவதாகப் பேசிய ராகுல் காந்தி, மீட்பு பணிகளை விரைந்து முடிக்கவேண்டும் என கோரிக்கை வைத்தார்
கேரளாவின் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது.
வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 42ஆக உயர்ந்துள்ளது. இது மக்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
“ஒவ்வொரு வாரமும் ரயில் விபத்துகள் நடக்கின்றன.. எவ்வளவு காலம் இதை பொறுத்துக்கொள்ள போகிறோம்” - மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி காட்டம்
திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை. சென்னை அசோக் நகரில் உள்ள வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்
வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவரகளின் எண்ணிக்கை 36-ஆக அதிகரிப்பு
Wayanad Landslide: கேரள மாநிலம் வயநாடு முண்டகை சூரல்மலையில் ஏற்பட்ட நிலச்சரிவில், பெரும்பாலானோர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Gold rate : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.240 குறைந்து, இன்று சவரன் ரூ.51,080-க்கு விற்பனையாகிறது
கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் - பிரதமர் மோடி
ஜார்க்கண்ட்டில் இன்று அதிகாலை ஹவுரா - மும்பை விரைவு ரயில் தடம் புரண்ட விபத்தில் 2 பேர் உயிரிழப்பு!
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே இரவில் கிராம பகுதிக்கு உணவு தேடி வந்த சுள்ளி கொம்பன் என்ற யானை, பாக்கு மரத்தை சாய்க்கும்போது மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழப்பு பாக்கு மரம் தாழ்வான மின் கம்பியில் உரசியதால் விபத்து ஏற்பட்டுள்ளது
நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு!
தொடர் கன மழை காரணமாக வால்பாறையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - பொள்ளாச்சி சப் கலெக்டர்
நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பவ்யா லக்ஷ்மி உத்தரவிட்டுள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பவ்யா லக்ஷ்மி உத்தரவிட்டுள்ளார்.
கேரள மாநிலம் வயநாடு அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டன. அதிகாலை நேரத்தில் அடுத்தடுத்து 3 நிலச்சரிவுகள் ஏற்பட்டதாகவும், இதனால் ஏராளமானோர் மண்ணுக்கு அடியில் சிக்கியதாகவும் கூறப்படுகிறது. அவர்களை மீட்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
Background
- இலங்கை சிறையில் வாடு மீனவர் குடும்பங்களுக்கான உதவித்தொகை அதிகரிப்பு - சிறைபிடிக்கப்படும் படகுகளுக்கான நிவாரணத்தையும் உயர்த்தி முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
- மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119 அடியை நெருங்கியதால் விநாடிக்கு 23 ஆயிரம் கன அடி நீர் திறப்பு - அணை நிரம்ப உள்ளதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
- தொடர் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் இன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை - மாவட்ட ஆட்சியர்
- தூத்துக்குடியில் உயிருக்கு அஞ்சி ஓடியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதை ஜீரணிக்க முடியாது - இழப்பீடு கொடுப்பது எப்படி நியாயம் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
- தொடர் மழை காரணமாக குற்றால அருவிகளில் குளிக்க 2வது நாளாக தடை
- கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கடும் நிலச்சரிவு - நூற்றுக்கணக்கான குடும்பங்கள் சிக்கியுள்ளதாக தகவல்
- பிரதமர் மோடி அரசின் சக்கர வியூகத்தில் நாடு சிக்கியுள்ளதாக ராகுல் காந்தி விமர்சனம் - இந்தியா கூட்டணி அதனை தகர்க்கும் என்றும் நம்பிக்கை
- இளநிலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 14ம் தேதி தொடங்க வாய்ப்பு - மருத்துவ கலந்தாய்வுக் குழு
- டெல்லி வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த 3 மாணவர்களின் குடும்பங்களுக்கு 10 லட்ச ரூபாய் நிவாரணம் அறிவிப்பு
- அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற தெலங்கானாவில் 41 நாள் ஹோமம்
- இங்கிலாந்தில் கத்தி குத்து தாக்குதல் - 2 சிறுவர்கள் பலி, 9 பேர் காயம்
- வெனிசூலா அதிபர் தேர்தலில் நிகோலஸ் மதுரோ வெற்றி - எதிர்க்கட்சிகள் ஏற்க மறுப்பு
- இலங்கையில் நீதித்துறை அமைச்சர் ராஜினாமா - அதிபர் தேர்தலில் போட்டியிட முடிவு
- இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது
- பாரிஸ் ஒலிம்பிக் - வீராங்கனைகளை விமர்சித்த வர்ணனையாளர் நீக்கம்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -