மின்சார இணைப்பு கொடுக்க லஞ்சம் வாங்கியவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


தேனி மவட்டம் கம்பம் அருகே சுருளிப்பட்டியை சேர்ந்தவர் மகேந்திரன். இவர் புதிதாக கட்டிய வீட்டுக்கு மின் இணைப்பு கேட்டு சுருளிப்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் கடந்த 2015-ம் ஆண்டு மனு கொடுத்துள்ளார். அப்போது அங்கு பணியாற்றிய மின்வாரிய ஊழியர் சிவசாமி என்பவர் மின் இணைப்பு பெறுவதற்கு ரூ.7 ஆயிரம் செலவு ஆகும் என்றார். மின் இணைப்புக்கு ரூ.2 ஆயிரம் தானே என்று மகேந்திரன் கேட்டதற்கு, ரூ.2 ஆயிரம் கட்டணமும், ரூ.5 ஆயிரம் லஞ்சமாகவும் கொடுக்க வேண்டும் என்றுள்ளார். மீண்டும் அவர் சிவசாமியை சந்தித்து கேட்டபோது, லஞ்ச பணத்தில் ரூ.1000 குறைத்துக்கொண்டு மொத்தம் ரூ.6 ஆயிரம் கொடுக்குமாறு கேட்டுள்ளார்.


ரயில் மூலம் தென்காசி வந்த முதல்வருக்கு உற்சாக வரவேற்பு... 1 லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் !



 


இதுகுறித்து தேனி லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் மகேந்திரன் புகார் செய்தார். அவரிடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரசாயனம் தடவிய பணத்தை கொடுத்து அனுப்பினர். அவர் அதை சுருளிப்பட்டி மின்வாரிய அலுவலகத்துக்கு சென்று சிவசாமியிடம் கொடுத்தார். அப்போது அங்கு வந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் சிவசாமியை கைது செய்தனர். இந்த வழக்கு தேனி மாவட்ட தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு  நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர்  சிவசங்கரன் ஆஜராகி வாதாடினார். வழக்கின் இறுதி விசாரணை முடிந்ததை தொடர்ந்து நீதிபதி கோபிநாதன் நேற்று தீர்ப்பளித்தார். அப்போது லஞ்சம் வாங்கிய சிவசாமிக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.


Gujarat, Himachal Pradesh Election Result LIVE: இரு மாநிலங்களிலும் பாஜகவின் முதல்வர் வேட்பாளர்கள் வெற்றி..!




சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு ஒன்றரை ஆண்டு சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பு.




சாணார்பட்டி அருகே உள்ள கொத்தப்புளிபட்டியை சேர்ந்தவர் மாணிக்கம் (36). லாரி டிரைவர். இவர், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், சாணார்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த வழக்கு, திண்டுக்கல் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றது. நீதிபதி சரண் வழக்கை விசாரித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர்  ஜோதி ஆஜராகி வாதாடினார். இந்த நிலையில் வழக்கு விசாரணை நிறைவுபெற்றதை தொடர்ந்து நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார். அதில் குற்றம் சாட்டப்பட்ட மாணிக்கத்துக்கு ஒன்றரை ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.