கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சாந்தாம்பாறை பகுதிகளில் சுற்றித் திரிந்த அரிக்கொம்பன் என்ற காட்டு யானை அந்த பகுதியில் அரிசிக்காக வீடுகள், ரேஷன் கடைகளை சேதப்படுத்தியது. கடந்த 5 ஆண்டுகளில் 8 பேரை அந்த யானை கொன்றதாகவும் கூறப்படுகிறது. இதனால் அந்த யானையை கேரள வனத்துறையினர் கடந்த மாதம் 29-ந் தேதி மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பிடிக்கப்பட்ட இந்த யானையை தமிழக, கேரள மாநில எல்லையில் பெரியாறு புலிகள் காப்பக பகுதியில் விட்டனர்.
Twitter CEO: ட்விட்டருக்கு புதிய சி.இ.ஓ.: யார் இந்த லிண்டா யாகாரினோ? ஓர் அலசல்..!
வனப்பகுதிக்குள் விடப்பட்ட அந்த அரிக்கொம்பன் காட்டு யானை அங்கிருந்து இடம் பெயர்ந்து தமிழக வனப்பகுதிக்குள் நுழைந்தது. தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள மிகவும் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விலங்கும் ஹைவேவிஸ் மலைப்பகுதியில் அந்த யானை சில நாட்களாக சுற்றித் திரிந்து வருகிறது. வனப்பகுதிகள், மலைப்பகுதியில் கம்பீரமாக அந்த யானை சுற்றி வருகிறது.
Elon Musk: பதவியை ராஜினாமா செய்தார் எலான் மஸ்க் - டிவிட்டருக்கு புதிய சி.இ.ஓ...!
இந்நிலையில் நேற்று அதிகாலை மேகமலை தேயிலை தோட்ட குடியிருப்பின் அருகே பத்துக்கோடு பகுதியில் அரிக்கொம்பன் சுற்றித்திரிந்தது. பின்னர் அங்கிருந்த 3 வீடுகளை சேதப்படுத்தியது. இதையடுத்து வீடுகளில் உணவுக்காக வைத்திருந்த அரிசியை தின்றுள்ளது. இதற்கிடையே தேயிலை தோட்டத்தில் வேலை இல்லாததால் 3 பேர் மட்டும் அங்கு இருந்தனர். அவர்கள் யானை வருவதை கண்டதும் பதறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
'அரிக்கொம்பன்' காட்டுயானை தஞ்சம் - மேகமலை, ஹைவேவிஸ் மலைப்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை
பின்னர் அங்கேயே உலாவிக்கொண்டிருந்த அந்த யானை சிறிது நேரத்திற்கு பிறகு திரும்பி சென்றது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.அரிக்கொம்பன் யானையை நேரில் பார்த்த தொழிலாளர்கள் கூறுகையில், “யானையின் கழுத்தில் பெல்ட் கட்டியிருந்தது. அதன் கண்கள் சிவப்பு நிறத்தில் ஆக்ரோஷமாக இருந்ததாகவும், எங்களை தாக்க விரட்டியதில் ஓடிச் சென்று மரத்தில் ஏறி அவர்கள் தப்பித்ததாகவும் கூறினர். எனவே அரிக்கொம்பனின் அட்டகாசத்தை தடுக்க அதனை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்