தேனி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 75 சதவீதம் மற்றும் அதற்கு மேல் கடுமையாக உடல் இயக்கம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள், மனவளர்ச்சி குன்றியவர்கள், தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், முதுகு தண்டுவடம், தண்டுவட மரபு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதம் ரூ.1,500 வீதம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
பொதுநல வழக்கு என்ற பெயரில் நீதிமன்றத்தின் நேரம் வீணடிப்பு - மனுதாரருக்கு அபராதம் விதித்த நீதிமன்றம்
ஹால்மார்க் தங்க நகை வழக்கு: BIS நிர்வாக இயக்குனருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த உத்தரவு
இந்த திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறும் பயனாளிகள் கிராம நிர்வாக அலுவலரிடம் வாழ்நாள் சான்று பெற்று மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். எனவே இதுவரை ஒப்படைக்காத பயனாளிகள் கிராம நிர்வாக அலுவலரிடம் வாழ்நாள் சான்று பெற்று அடுத்த மாதம் (செப்டம்பர்) 30-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கான படிவத்தை மாவட்ட நிர்வாகத்தின் www.theni.nic.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்