தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே போடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அகமலை ஊராட்சியில் ஊரடி ஊத்துக்காடு, கருங்கல் பாறை, குறவன்குளி உள்ளிட்ட எட்டுக்கும் மேற்பட்ட மலை கிராம மக்கள் உள்ளனர். எந்த வித அடிப்படை வசதியின்றி தங்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் மற்றும் மலைப்பகுதிகளில் விளையும் விவசாய விளைபொருட்களை குதிரைகள் மூலமாக கொண்டு செல்வர். கடந்த 40 ஆண்டுகளாக சாலை வசதி இல்லாத நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முன்பு தமிழக அரசு சோத்துப்பாறை அணை பகுதியிலிருந்து நான்கு கிலோ மீட்டர் தூரம் வரை புதிதாக சாலை அமைப்பதற்கு முதற்கட்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 29.88 லட்சம் நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக மலைப்பகுதிகளில் வாழும் மக்கள் அனைவரையும் வெளியேற்றும் நடவடிக்கையில் தேனி மாவட்ட வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். மலைவாழ் மக்களுக்கு அறிவிப்பு தரும் வகையில் கிராமத்தை விட்டு வெளியேற்றக் கோரி அரசு சார்பாக ஒவ்வொரு மலை கிராமமாக சென்று நோட்டீஸ் கொடுத்து வெளியேற்றும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர் வனத்துறையினர். இதனால் அகமலை ஊராட்சிக்கு உட்பட்ட மலைப் பகுதிகளில் வாழும் மக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்ததோடு, மலைப்பகுதிகளில் வாழும் மக்களை வெளியேற்றும் நடவடிக்கையை தமிழக அரசு கைவிட வேண்டும் என கோரிக்கை விடுப்பதோடு, மலைப்பகுதிகளில் வாழும் மக்களை வெளியேற்றும் நடவடிக்கையை அரசு மேற்கொண்டால் தங்களை நாடு கடத்துங்கள், அல்லது அனைவரையும் சுட்டுக் கொள்ளுங்கள் என்று மன வேதனையுடன் பல்வேறு கோரிக்கைகளையும் போராட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றனர்.
WFH அரசியல்வாதிக்கு CM ஆசையா ? - விஜய்க்கு எதிராக குவியும் கண்டனங்கள்
வனத்துறையினர் தொடர்ந்து மலைப்பகுதியில் வாழும் மக்களை வெளியேற்றும் நடவடிக்கையில் அறிவிப்பானை கொடுத்து வெளியேற்றும் நோக்கத்துடன், பெண்கள் மற்றும் குழந்தைகளை தொடர்ந்து தொந்தரவு செய்து வருகின்றனர் என மலைவாழ் மக்கள் புகார் தெரிவித்தனர். குறிப்பாக விவசாய பொருட்களை எடுத்துச் செல்வதற்கும் அனுமதி மறுத்து விவசாயிகளுக்கு இடையூறு செய்து வருவதாகவும் புகார் தெரிவித்து தேனி பங்களாமேட்டில் அகமலை ஊராட்சி அனைத்து கிராம விவசாயிகள் சார்பில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர் .
Pushpa 2 : நம்பி வாங்க! புஷ்பா 2 அந்தப்படம் மாதிரி இருக்காது.. சொன்னது யார் தெரியுமா?
இதுகுறித்து கிராமத்தினர் கூறுகையில், ஐந்து தலைமுறைகளாக விவசாயம் செய்து வரும் எங்கள் நிலங்களை காலி செய்ய வனத்துறையினர் தொடர்ந்து எங்களுக்கு இடையூறு செய்து வருவதாகவும் மேலும் விவசாய நிலங்களுக்கு தேவையான மின்சாரம், தண்ணீர் ஆகியவற்றை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாய நிலங்களை அப்புறப்படுத்தும் வனத்துறையினர் முயற்சியை நிறுத்தி வைக்க கோரியும் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.