இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் ஆகியோர் நடிப்பில் இந்த ஆண்டின் மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட திரைப்படமான புஷ்பா 2 நாளை ( டிசம்பர் 5) உலகெங்கிலும் 12000 திரையரங்களில் வெளியாகயுள்ளது. தற்போது இந்த படத்திற்கான முன்பதிவு தொடங்கிவிட்ட நிலையில் டிக்கெட் விற்பனை விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது.
ரசூல் பூக்குட்டி:
சமீப காலமாக வெளிவரும் திரைப்படங்களில் ஒலி அமைப்பு சரியாக இல்லை என்று ரசிகர்கள் விமர்சனம் செய்து வந்தனர். குறிப்பாக சில நாட்களுக்கு முன்பு சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா திரைப்படத்தில் ஒலி அமைப்பு சரியாக இல்லை என்றும், காதுகளை பாதிப்படையும் வகையில் இருந்ததாக விமர்சனங்கள எழுந்தது. இது குறித்து ஆஸ்கார் விருது வென்ற ஒலி அமைப்பாளாரான ரசூல் பூக்குட்டியும் தனது கருத்தை பதிவு செய்திருந்தார்.
இந்த நிலையில் புஷ்பா 2 படத்தின் ஒலி அமைப்பு குறித்து ரசூல் பூக்குட்டி பேசியுள்ளார். அதில் புஷ்பா 2 படத்தின் ஒலி அமைப்பு ஹாலிவுட் படத்துக்கு அமைக்கு லெவல் 7 டால்பி அமைப்பில் பதிவு செய்து தயார்படுத்தியுள்ளோம், கமர்சியல் படங்களில் வேலை செய்யும் ஒலி அமைப்பாளர்கள் படத்தின் ஒலி அமைப்பை சற்று குறைத்த வைப்பர், இதற்கான காரணம் என்ன வென்றால் திரையரங்குகளில் படத்தை ஒலியை சற்று குறைத்து வைப்பர், இதனால் தான் நமது ஊர் திரைப்படங்களில் ரசிகர்களுக்கு அத உண்மையான உணர்வு கிடைப்பதில்லை. இதுவே ஒரு ஹாலிவுட் படம் வெளியானால் அதன் ஒலி அமைப்பை மாற்றாமல் டால்பி தரநிலை 7-ஐ பின்பற்றுகின்றன என்று ரசூல் பூக்குட்டி விளக்கினார். இதனால் தான் நமது ஊர் திரைப்படங்களில் ரசிகர்களுக்கு அந்த ஒலி அமைப்பின் உண்மையான உணர்வு கிடைப்பதில்லை. மேலும் அதிக சத்தத்தால் திரையரங்கில் உள்ள ஸ்பீக்கர்கள் சேதமடைவதாக திரையரங்க உரிமையாளர்கள் அஞ்சுகின்றனர்.
Pushpa 2:ஒரு டிக்கெட் ரூ.3,000! முன்பதிவு ரேஸில் பாகுபலி -2 -ன் சாதனையை முறியடிக்குமா புஷ்பா-2?
”ஹாலிவுட் தரத்தில் இருக்கும்:”
இதனால் புஷ்பா 2 படத்திற்கு இது போன்று ஒலி அமைப்பு பிரச்சனை வரக்கூடாது என்பதே எங்களது நோக்கமாக உள்ளது. அதனால் நாங்கள் படத்தை 7-வது தரநிலையில் ஒலி அமைப்பை அமைத்துக்கொடுத்துள்ளோம். இதனால் ஸ்பீக்கர்கள் சேதமடைவதைப் பற்றி தியேட்டர் உரிமையாளர்கள் கவலைப்படத் தேவையில்லை. தியேட்டருக்கு வரும் ரசிகர்களுக்கு உண்மையான ஆடியோ உணர்வை ரசிகர்களுக்குஹாலிவுட் தரத்தில் கொடுக்கும் விதத்தில் இருக்கும் என்று ரசூல் புக்குட்டி தெரிவித்தார்.