தமிழக - கேரள மாநில எல்லையில் முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீர் ஆதாரமாக இந்த அணை திகழ்கிறது. 152 அடி உயரம் கொண்ட இந்த அணையில் 142 அடி வரை நீரை தேக்கிக்கொள்ள உச்ச நீதிமன்றம் ஏற்கனவே அனுமதி அளித்துள்ளது. பருவகாலத்துக்கு ஏற்ப நீர் மட்ட உயர்வை நிர்ணயிக்கும் ”ரூல் கர்வ்” விதிப்படி நேற்று 1-ந்தேதி முதல் வருகிற மே 31-ந்தேதி வரை அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கிக்கொள்ளலாம் என்று அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரசித்தி பெற்ற கோவில்களில் மருத்துவ மையங்கள் திறப்பு.. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அதிரடி..
இந்நிலையில். கடந்த 27-ந்தேதி முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 138.05 அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு 257 கனஅடியாக இருந்தது. கடந்த சில நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அதன்படி இன்று அணையின் நீர் மட்டம் 139.05 அடியாக உயர்ந்தது. நீர்வரத்து வினாடிக்கு 689கனஅடியாகவும், வெளியேற்றம் வினாடிக்கு511 கனஅடியாகவும் உள்ளது.
தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு அணைகளின் இன்றைய நிலவரப்படி நீர் நிலவரம்:-
Today's 2.12.2022 Dam level data:
1) Vaigaidam -Level- 65.94 (71)feetCapacity:4839McftInflow:1042 cusecOutflow : 1719cusec
2)Periyardam: 139.05 (142)feetCapacity:6887 McftInflow: 689 cusecOutflow: 511cusec
3) ManjalarLevel- 54.90(57) feetCapacity:433.28 McftInflow: 100cusecOutflow: 30 cusec
4)Sothuparai dam Level- 126.57(126.28)feetCapacity: 100 Mcft Inflow: 146 cusecOutflow:30 cusec 5)Sanmuganathi damLevel-47.40 (52.55)feetCapacity:64.20McftInflow :3 cusecOutflow: 14.47 cusec.