மதுரை, போடி அகல ரயில் பாதை திட்டப்பணி நடந்து வருகிறது. இதில், தேனி வரை பணிகள் முடிவடைந்ததையொட்டி பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது. தற்போது போடி வரை பெரும்பாலான பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து, கடந்த 2-ந் தேதி ரயில் என்ஜின் அதிவேக சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்தது. இதையடுத்து தேனி - போடி ரயில் பாதையில் ரயில் செல்லும் போது அதிர்வுகள் ஏற்படுகிறதா?


Pongal Gift: பொங்கல் பரிசு தொகுப்புக்கு ஆட்சியர்களே பொறுப்பு... தமிழ்நாடு அரசு சுற்றறிக்கை..!



வேறு ஏதேனும் சிறு குறைபாடுகள் இருக்கிறதா? என்பதை கண்டறிய நவீன ஆய்வு ரயில் சோதனை ஓட்டம் கடந்த 9-ந்தேதி நடந்தது. அப்போது போடியில் இருந்து தேனி வரை 125 கிலோ மீட்டா் வேகத்தில் ரயில் இயக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடந்தது. இந்நிலையில் போடி, தேனி ரயில் பாதையில் இறுதிகட்ட ரயில் சோதனை ஓட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி தேனியில் இருந்து 3 பெட்டிகள் இணைக்கப்பட்ட ரயில் போடிக்கு வந்தது.


Pele : கால்பந்தின் ராஜாதி ராஜா.. கால்பந்து பேரரசர்... பீலேவின் வாழ்க்கை சாதனைகள் இதோ..!



முன்னதாக தேனி ரயில் நிலையத்தில் இருந்து மோட்டார் டிராலி மூலம் பெங்களூரு தென் சரக ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய் குமார் ராய் ரயில் பாதையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது தேனி அருகே உள்ள வாழையாறு கொட்டக்குடி, பூதிப்புரம் ஆற்றுப்பாலங்கள் மற்றும் போடி- புதூர் ரயில்வே கேட் ஆகியவற்றை ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் தெற்கு ரயில்வே கட்டுமான பிரிவு தலைமை செயல் அதிகாரி வி.கே.குப்தா, மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த், முதன்மை பொறியாளர் மஸ்தான் ராவ், முதன்மை கட்டுமான பொறியாளர் இளம் பூரணன், முதன்மை தொலை தொடர்பு பொறியாளர் பாஸ்கர் ராவ், முதன்மை மின் பொறியாளர் பாலாஜி, துணை முதன்மை பொறியாளர் சூரியமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.


Rishabh Pant Accident: விபத்தில் தீப்பிடித்து எரிந்த கார்.. கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதி!


இதையடுத்து போடியில் இருந்து தேனிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் ரயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடந்தது. அப்போது மாலை 3.27 மணிக்கு போடியில் இருந்து புறப்பட்ட ரயில் 3.36 மணிக்கு தேனிக்கு சென்றடைந்தது. இதில் 15 கிலோ மீட்டர் தூரத்தை 9 நிமிடத்தில் ரயில் கடந்து சென்றது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண