உத்தரகாண்ட் அடுத்த ரூர்க்கியில் நிகழ்ந்த கார் விபத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் படுகாயம் அடைந்துள்ளார். கார் தீப்பிடித்து எரிந்ததில் ரிஷப் பண்ட்-க்கு தலை, காலில் படுகாயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 


இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரிஷப் பந்தின் கார் டெல்லியில் இருந்து வீடு திரும்பும் போது பெரும் விபத்துக்குள்ளானது. ஹம்மாத்பூர் ஜால் அருகே ரூர்க்கியின் நர்சன் எல்லையில் அவரது கார் விபத்துக்குள்ளானது. ரிஷப் சிகிச்சைக்காக டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு அவருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 






கால் மற்றும் தலையில் பலத்த காயம்:


ரிஷப் பண்ட்டின் நெற்றி மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தகவல் கிடைத்ததும் போலீஸ் சூப்பிரண்டு தேஹத் ஸ்வப்னா கிஷோர் சிங் சம்பவ இடத்துக்கு வந்தார். தற்போது ரிஷப் பந்தின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், ரூர்க்கியில் இருந்து டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனைக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு அவருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்படும் என்றும் சக்ஷாம் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் சுஷில் தெரிவித்தார். 






தண்டவாளத்தில் மோதிய கார்:


விபத்து நடந்த பகுதியில் நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கையில், ”ரிஷப்பின் கார் தண்டவாளத்தில் மோதியது, அதன் பிறகு கார் தீப்பிடித்தது. மிகவும் சிரமப்பட்டு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அதே நேரத்தில் விபத்தில் பலத்த காயமடைந்த ரிஷப் பந்த் டெல்லி சாலையில் உள்ள சக்ஷாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 


அவரது கார் நர்சன் நகரை அடைந்தபோது, ​​கார் கட்டுப்பாட்டை இழந்து, தண்டவாளங்கள் மற்றும் சாலையில் உள்ள பாதுகாப்பு தடுப்புகளை உடைத்துக்கொண்டு கவிழ்ந்தது” என தெரிவித்தனர். 


கார் நம்பர்:


மெர்சிடிஸ் காரின் நம்பர் பிளேட் DL 10 CN 1717 ஆகும். அதே நேரத்தில், விபத்து நடந்த இடத்தில் இருந்து கிராம மக்களும் காரில் இருந்து கொஞ்சம் பணத்தை எடுத்ததாக கூறப்படுகிறது. விபத்துக்கு நடந்த இடத்தில் சில ரூபாய்கள் சிதறி கிடந்துள்ளது.