பொங்கல் பரிசு தொகுப்பு, ரொக்க பணம் மக்களை சென்றடைவதற்கு மாவட்ட ஆட்சியர்கள் பொறுப்பு என தமிழ்நாடு அரசு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. 


இதுகுறித்து அந்த அறிக்கையில், பொங்கல் தொகுப்பி உரிய முறையில் விநியோகம் செய்ய வேண்டிய முழு பொறுப்பும் ஆட்சியர்களே சாரும். ஜனவரி 9 ம் தேதி அனைத்து நியாய விலைக் கடைகளிலும் பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி தொடங்க வேண்டும். பச்சரிசி, சர்க்கரை உரிய தரத்துடன் இருப்பதை நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.