Theni: மூச்சுத் திணறல் பிரச்சனையால் பாதிக்கப்பட்ட சிறுவன்! 3 மணி நேரம் தொடர்ந்து நீந்தி உலக சாதனை!

மூச்சுத் திணறல்  பிரச்சனையால் பாதிக்கப்பட்ட சிறுவன் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டு உடல்நல பாதிப்புகளை தகர்த்தெறிந்து மூன்று மணி நேரம் தொடர்ந்து நீந்தி ஆசிய அளவில் உலக சாதனை.

Continues below advertisement

சிறுவயதிலேயே மூச்சுத் திணறல்  பிரச்சனையால் பாதிக்கப்பட்ட சிறுவன் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டு உடல்நல பாதிப்புகளை தகர்த்தெறிந்து மூன்று மணி நேரம் தொடர்ந்து நீந்தி ஆசிய அளவில் உலக சாதனை படைத்த சிறுவனின் முயற்சி பாராட்டு பெற்றது

Continues below advertisement

தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த ஊட்டி வர்க்கி: புவிசார் குறியீடு பெற்று அசத்தல்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

தேனி அருகே உள்ள லட்சுமிபுரம் அருகே வசித்து வருபவர் நவீனா இவரின் ஆறு வயது மகன் திரினேஷ் தேனியில் உள்ள தனியார் பள்ளியில் 2 ஆம் வகுப்பு படித்து வருகிறான். சிறுவனுக்கு சிறு வயது முதலே மூச்சுத் திணறல் பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதனால் மருத்துவரின் அறிவுரைப்படி நீச்சல் பயிற்சியை மேற்கொண்டு வந்த சிறுவன் நீச்சல் மீது உள்ள ஆர்வத்தால்  உலக சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தான் இதற்காக தொடர்ந்து பயிற்சி மேற்கொண்ட சிறுவன் யுனிவர்சல் ரெக்கார்டு ஃபோரம் என்ற புத்தகத்தில் உலக சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.


தேனி விளையாட்டு மைதானம் அருகே உள்ள நீச்சல் குளத்தில் 7500 மீட்டர் தூரத்தை தொடர்ந்து நீந்தும் முயற்சியில் ஈடுபட்டு ஒரு முனையில் இருந்து மறுமுனை வரை 150 முறை (7.5 கி.மீ) தூரத்தை  3 மணி நேரம் 15 நிமிடத்தில் தொடர்ந்து நீந்தி ஆசிய அளவில் உலக சாதனை படைத்தார். சிறுவனின் சாதனையை அவர்களது உறவினர்கள் மாணவர்கள் பள்ளி ஆசிரியர்கள் கைத்தட்டி சிறுவனை உற்சாகப்படுத்தினர்.


சிறுவனின் சாதனை ஆசியா யுனிவர்சல் ரெக்கார்ட் ஃபோரம் புத்தகத்தில் உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டு சிறுவனுக்கு சாதனைக்கான பாராட்டு சான்றிதழ்களும் மெடல்களும் வழங்கப்பட்டது . இது குறித்து சிறுவனின் தாயார் கூறுகையில், தனது மகன் நீச்சல் பயிற்சியில் உள்ள ஆர்வத்தால் தனது கடின உழைப்பால் இந்த சாதனை படைத்துள்ளார் என்றும், இந்த சாதனை தங்களுக்கு பெருமையாக உள்ளது. இதற்கு நீச்சல் பயிற்சியாளர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பெரும் உதவியாக இருந்ததாக தெரிவித்தார்.

Sonu Sood : உணவில் எச்சில் துப்பியதை நியாயப் படுத்திய நடிகர் சோனு சூட்... இணையத்தில் வலுக்கு கண்டனங்கள்


சிறு வயது முதலே மூச்சுத் திணறல் பிரச்சனையால்  உடல் நல பாதிப்பு ஏற்பட்ட சிறுவன், நீச்சல் பயிற்சியின் மீது கொண்ட ஆர்வத்தால் உடல் நல பாதிப்புகள் தனது சாதனையை தடுக்க முடியாது என்ற சாதித்துக் காட்டிய சிறுவனின் செயல் அனைவராலும் பாராட்டை பெற்றது.

Continues below advertisement