ஒவ்வொரு துறைகளிலும் தங்களது தனித்திறன்களை வெளிப்படுத்தும் வண்ணமாக பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசளிப்புகள் நடைபெறுகிறது. இதேபோன்று மைக்செட் உரிமையாளர்கள் தங்களது மைக் செட்யின் தனி திறன்களை வெளிக்காட்டும் விதமாக இந்த  இசை போட்டிகள் நடத்தி வருகின்றனர்.




இதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டம் கம்பத்தில்  கம்பம் உத்தமபுரம் ஒலிபெருக்கியாளர்கள் சார்பில் 11 ஆம் ஆண்டு இசைப்போட்டி திருவிழா நடைபெற்று வருகிறது. இதற்காக கம்பத்திலிருந்து மணிக்கட்டி ஆலமரம் பகுதிக்கு செல்லும் வழியில்  திறந்தவெளியில் மைக்செட்போட்டி நடத்தப்பட்டது.




இந்த போட்டியில் மதுரை, திண்டுக்கல்,தேனி, மாவட்டம் உள்ளிட்ட  மாவட்டங்களில் இருந்து சுமார் 90க்கும் மேற்பட்ட மைக் செட் உரிமையாளர்கள் தங்களின் மைக்செட் உபகரணங்களுடன் வந்து கலந்து கொண்டு தங்களது ஒலிபெருக்கியின் மூலம் தங்களது தனி திறன்களை வெளிப்படுத்தி வருகின்றனர். நேற்றும், இன்று என இரண்டு நாட்கள் இந்த இசைப் போட்டி திருவிழாவானது நடைபெற்றது.


Adani Hindenburg: ”உச்சநீதிமன்றமே சொல்லிடுச்சு, எங்க மேல தப்பு இல்ல” - ஹிண்டன்பர்க் அறிக்கைக்கு அதானி விளக்கம்


இப்போட்டியில் மைக் செட் போட்டி ஒலிபெருக்கிகள் வரிசையாக கட்டப்பட்டு அந்த ஒலிபெருக்கிகளில் இருந்து துல்லியமாகவும் தெளிவாகவும் அதிக சத்தத்துடன் கூடிய பாடல் ஒலிக்கின்றதோ அதனை சிறந்த ஒலி பெருக்கியாக தேர்வு செய்யப்பட்டது.


Home Loan: சொந்தமாக வீடு கட்ட ஆசையா? குறைந்த வட்டியில் அதிக கடன் தரும் வங்கிகள், உங்களுக்கான சாய்ஸ் எது?


இந்த ஒலிபெருக்கி இசை போட்டியில் முற்றிலுமாக பழைய பாடல்கள் மட்டுமே போட்டியில் அனுமதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த இசை போட்டியில் வெற்றி பெறும் ஒலிபெருக்கி உரிமையாளர்களுக்கு ரொக்க தொகை பரிசாக வழங்கப்படுகிறது.




மேலும் இந்த போட்டியின் போது மைக் செட் உரிமையாளர்கள் கூறுகையில் பொதுமக்கள் மத்தியில் மைக் செட் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு ஒரு உரிய அங்கீகாரம் கிடைக்கும் வண்ணமாக நலவாரியம் அமைத்து தர வேண்டும் மேலும் கோவில் திருவிழாக்கள் மற்ற திருவிழாக்களில் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை பயன்படுத்துவதற்கு அரசு அனுமதி தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினார். இந்த போட்டியினை கம்பம் மற்றும் தேனி மாவட்டத்திலிருந்து பல்வேறு பகுதிகளில் இருந்து இசை ரசிகர்கள் வந்து ஆரவாரம் செய்து போட்டியினை ரசித்துச் செல்கின்றனர்.