தேனி மாவட்டம் போடி மெட்டு மலைச்சாலையில் 12 வது கொண்டை ஊசி வளைவு அருகே நள்ளிரவில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் புலியின் வலது பின் காலில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த காயத்துடன் நடுரோட்டில் இருந்த புலியை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டுநர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டதை தொடர்ந்து வீடியோ வைரலாக வருகிறது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே சின்ன கானல் பகுதியில் அடிக்கடி யானை இறங்கும் பகுதிகளில் பகல் நேரங்களில் தேயிலை தோட்டங்களில் புலி நடமாட்டம் இருப்பதாக கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை வழி சாலையான தேனி மாவட்ட போடி மெட்டு சாலைகளிலும் இரவு நேரங்களில் புலி நடமாட்டம் இருப்பதாகவும் கூறப்பட்டு வந்தது.
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசின் சார்பில் மேற்கு தொடர்ச்சி மலை மேகமலை உள்ளிட்ட பகுதிகளை புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டு வனவிலங்குகளை வளர்க்கும் பொருட்டு புலி, சிறுத்தை செந்நாய் ,நரி ,கரடி உள்ளிட்டவைகளை குட்டிகளாக வனப்பகுதியில் விட்டனர். இந்த சூழலில் குட்டிகள் வளர்ந்து பெரிதாகி அதிகளவு மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் கேரளா பகுதிகளிலும் பகல் நேரங்களிலும், இரவு நேரங்களிலும் விலங்குகள் அதிக நடமாட்டம் காணப்பட்டன.
Breaking News LIVE, Aug 11: 19,922 மாணவ, மாணவிகள் என்ஜினியரிங் படிப்புகளில் சேர்ந்துள்ளனர்!
இந்நிலையில் நேற்று நள்ளிரவு தமிழக கேரள எல்லையான போடிமெட்டு மலைச்சாலையில் நடந்து வந்த புலியினை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் காலில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தன. அப்போது கேரளாவில் இருந்து போடி நோக்கி வந்த ஜீப் நடுரோட்டில் புலி காயத்துடன் படுத்துக் கிடப்பதை கண்டு வாகனத்தில் இருந்தவர்கள் அச்சமடைந்தனர். மேலும் பொதுமக்கள் சத்தம் போடவே கால்களை நொண்டியவாறு அருகில் உள்ள வனப்பகுதிக்குள் புலி சென்றது . தற்போது போடிமெட்டு மலைச் சாலையில் புலி சிறுத்தை நடமாட்டம் அதிகரித்து வருவதால் வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து விலங்குகளை அடர்ந்த வனப்பகுதியில் விரட்ட வேண்டும் என வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.