Home Loan: ரூ.75 லட்சத்திற்கும் அதிகமான வீட்டு கடனுக்கு, குறைந்த வட்டி வசூலிக்கும் வங்கிகளின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.


வீட்டுக் கடன்:


தனி வீடு அல்லது அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீடு வாங்க, வீட்டிற்கான நிலம் வாங்க அல்லது இருக்கும் வீட்டைப் புதுப்பிக்க, நீட்டிக்க அல்லது பராமரிக்க, வங்கிகள் வழங்கும் வீட்டுக் கடன் எனும் வாய்ப்பை பயன்படுத்தப்படலாம். இதன் மூலம் நீண்ட காலத்திற்கு குறைந்த வட்டி விகிதத்தில் நிதி உதவி கிடைக்கிறது. வீட்டுக் கடனை மாதாந்திர தவணைகள் மூலம் திருப்பி செலுத்தலாம். கடனை முழுவதுமாக திருப்பிச் செலுத்தும் போது, ​​சொத்து மீதான உரிமையை வங்கி விட்டுக்கொடுக்கிறது.


இந்நிலையில், 75 லட்சத்திற்கும் அதிகமான தொகைகளுக்கான பொது மற்றும் தனியார் துறை வங்கிகளின் வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இந்த வட்டி விகிதங்கள் ரூ.75 லட்சத்துக்கும் மேலான வீட்டுக் கடனுக்கானது. கடன் விவரம், கடன் காலம் மற்றும் வங்கி அளவுருக்கள் ஆகியவற்றின் அடிப்படையில் வட்டி விகிதம் தீர்மானிக்கப்படுகிறது.


பொதுத்துறை வங்கிகளில் வட்டி விகிதம்



  • பாரத ஸ்டேட் வங்கி: 8.50 சதவிகிதம் முதல் 9.85 சதவிகிதம் வரை

  • பேங்க் ஆஃப் பரோடா: 8.40 சதவிகிதம் முதல் - 10.90 சதவிகிதம் வரை

  • யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா: 8.35 சதவிகிதம் முதல் - 10.90 சதவிகிதம் வரை

  • பஞ்சாப் நேஷனல் வங்கி: 8.40 சதவிகிதம் முதல் - 10.15 சதவிகிதம் வரை

  • பேங்க் ஆஃப் இந்தியா: 8.40 சதவிகிதம் முதல் - 10.85 சதவிகிதம் முதல்

  • கனரா வங்கி: 8.40 சதவிகிதம் முதல் - 11.15 சதவிகிதம் வரை

  • யூகோ வங்கி: 8.45 சதவிகிதம் முதல் - 10.30 சதவிகிதம் வரை

  • பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா: 8.35 சதவிகிதம் முதல் - 11.15 சதவிகிதம் முதல்

  • பஞ்சாப் & சிந்து வங்கி: 8.50 சதவிகிதம் முதல் - 10.00 சதவிகிதம் வரை

  • இந்தியன் ஓவர்சீஸ் வங்கி: 8.40 சதவிகிதம் முதல் - 10.60 சதவிகிதம் வரை

  • சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா: 8.45 சதவிகிதம் முதல் - 9.80 சதவிகிதம் வரை


தனியார் துறை வங்கிகளில் வட்டி விகிதம்



  • கோடக் மஹிந்திரா வங்கி: 8.70 சதவிகிதத்தில் இருந்து தொடங்குகிறது

  • ஐசிஐசிஐ வங்கி: 8.75 சதவிகிதம் முதல் தொடங்குகிறது

  • ஆக்சிஸ் வங்கி: 8.75 சதவிகிதம் முதல் - 9.65 சதவிகிதம் வரை

  • HSBC வங்கி: 8.50 சதவிகிதம் முதல் தொடங்குகிறது

  • சவுத் இந்தியன் வங்கி: 8.70 சதவிகிதம் முதல் - 11.70 சதவிகிதம் வரை

  • கரூர் வைஸ்யா வங்கி: 9.00 சதவிகிதம் முதல் – 11.05 சதவிகிதம் வரை

  • கர்நாடகா வங்கி: 8.50 சதவிகிதம் முதல் - 10.62 சதவிகிதம் வரை

  • பெடரல் வங்கி: 8.80 சதவிகிதம் முதல் தொடங்குகிறது

  • தன்லக்ஷ்மி வங்கி: 9.35 சதவிகிதம் முதல் - 10.50 சதவிகிதம் வரை

  • தமிழ்நாடு மெர்கன்டைல் ​​வங்கி: 8.60 சதவிகிதம் முதல் - 9.95 சதவிகிதம் வரை

  • பந்தன் வங்கி: 9.16 சதவிகிதம் முதல் - 13.33 சதவிகிதம் வரை

  • RBL வங்கி: 8.90 சதவிகிதம் முதல் தொடங்குகிறது

  • CSB வங்கி: 10.49 சதவிகிதம் முதல் - 12.34 சதவிகிதம் வரை

  • HDFC வங்கி லிமிடெட்: 8.75 சதவிகிதத்தில் தொடங்குகிறது

  • சிட்டி யூனியன் வங்கி: 8.75 சதவிகிதம் முதல் - 10.50 சதவிகிதம் வரை