தேனி மாவாட்டம் பெரியகுளம் அருகே தேவதானப்பட்டி, குள்ளப்புரத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய நிலத்திற்கு பட்டா மாறுதல் மற்றும் தனிப்பட்டா கேட்டு குள்ளப்புரம் கிராம நிர்வாக அலுவலகத்துக்கு சென்று விண்ணப்பித்துள்ளார். ஆனால் அவருக்கு பட்டா வழங்காமல் கிராம நிர்வாக அலுவலர் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதையடுத்து ஈஸ்வரன், குள்ளப்புரத்தை சேர்ந்த கிராம நிர்வாக அதிகாரி விஜயனை அணுகினார்.


Ola, Uber: 14% வரை விலை ஏறுகிறது ஓலா.. ஊபர் வாடகை..!? விரைவில் நடைமுறைக்கு வரும் புதிய கட்டணம்..




அவர் பட்டா வழங்குவதற்கு 50 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. மேலும் லஞ்ச பணத்தை வடுகப்பட்டியில் உள்ள இளமுருகன் என்பவரிடம் கொடுக்கும்படி விஜயன் கூறினார். லஞ்சம் கொடுக்க விரும்பாத ஈஸ்வரன், இதுகுறித்து தேனி லஞ்ச ஒழிப்பு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதை அடுத்து பட்டா வழங்குவதற்கு லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அதிகாரியை லஞ்ச ஒழிப்புத்துறை போலிசார் கையும் களவுமாக பிடிக்க போலீசார் முடிவு செய்தனர். இதை தொடர்ந்து ஈஸ்வரனிடம்  50 ஆயிரம் ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்து அனுப்பி வைத்துள்ளனர்.  


Kodanad Estate Case: கோடநாட்டில் நடந்தது என்ன? சசிகலாவிடம் இன்று விசாரணை




அந்த பணத்தை வடுகப்பட்டிக்கு சென்று இளமுருகனிடம் அவர் கொடுத்துள்ளார். அதனை எடுத்து கொண்டு இளமுருகனும், ஈஸ்வரனும் சேர்ந்து குள்ளப்புரம் கிராம நிர்வாக அலுவலகத்துக்கு சென்றனர். அங்கு ரசாயன பொடி தடவிய 50 ஆயிரத்தை விஜயனிடம் கொடுத்தனர். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் டிஎஸ்பி கருப்பையா தலைமையில் ஆய்வாளர் ஜெயப்பிரியா மற்றும் போலீசார் அங்கு சென்று கிராம நிர்வாக அதிகாரி விஜயனை கைது செய்தனர். பின்னர் அவரிடமும், இளமுருகனிடமும் போலீசார்  தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 


TN Assembly Session LIVE: மானியக் கோரிக்கை மீதான கேள்வி - பதில்.. சட்டப்பேரவை நிகழ்வுகள் உடனுக்குடன்..



மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர