TN Assembly Session LIVE: தமிழ்நாட்டில் 4 மண்டலங்களில் ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும் - முதலமைச்சர் அறிவிப்பு

TN Assembly Session LIVE Updates: உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளிக்க உள்ளனர். சட்டப்பேரவையில் நடக்கும் சம்பவங்கள் உடனுக்குடன் இங்கே..

ABP NADU Last Updated: 21 Apr 2022 12:21 PM
“போதி தர்மரின் மரபணுவில் வந்தவர்தான் முதலமைச்சர் ஸ்டாலின்; விளையாட்டை மேம்படுத்துவதில் அக்கறை காட்டுகிறார்!” - காங். உறுப்பினர் செல்வபெருந்தகை

“போதி தர்மரின் மரபணுவில் வந்தவர்தான் முதலமைச்சர் ஸ்டாலின்; விளையாட்டை மேம்படுத்துவதில் அக்கறை காட்டுகிறார்!” - காங். உறுப்பினர் செல்வபெருந்தகை

நெல்லையப்பர் கோவில் அன்னதானம் அனைவருக்கும் முறைப்படுத்தப்படும்- இந்துசமய அறநிலைத்துறை அமைச்சர்

நெல்லையப்பர் கோவில் அன்னதானம் அனைவருக்கும் முறைப்படுத்தப்படும்-  இந்துசமய அறநிலைத்துறை அமைச்சர்

வடசென்னையில் ரூ. 10 கோடி செலவின் நவீன குத்துச்சண்டை விளையாட்டு வளாகம் அமைக்கப்படும் - முதலமைச்சர் ஸ்டாலின்

வடசென்னையில் ரூ. 10 கோடி செலவின் நவீன குத்துச்சண்டை விளையாட்டு வளாகம் அமைக்கப்படும் - முதலமைச்சர் ஸ்டாலின்

தமிழ்நாட்டில் 4 மண்டலங்களில் ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும் - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

தமிழ்நாட்டில் 4 மண்டலங்களில் ஒலிம்பிக் அகாடமி  அமைக்கப்படும் - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னைக்கு அருகே மிகப்பெரிய விளையாட்டு நகரம் (மெகா ஸ்போர்ட்ஸ் சிட்டி) அமைய உள்ளது - சட்டப்பேரவையில் முதலமைச்சர் உரை

சென்னைக்கு அருகே மிகப்பெரிய விளையாட்டு நகரம் (மெகா ஸ்போர்ட்ஸ் சிட்டி) அமைய உள்ளது - சட்டப்பேரவையில் முதலமைச்சர் உரை

கோவையை புறக்கணிக்கும் எண்ணம் இல்லை - பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேச்சு

கோவையை புறக்கணிக்கும் எண்ணம் இல்லை - பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேச்சு

விளாத்திகுளம் காப்புக்காடுகள் காட்டு உயிரினங்களை கட்டுப்படுத்தி, வனத்துக்குள் விடும் அறிவிப்பு அளிக்கப்படும் - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்

விளாத்திகுளம் காப்புக்காடுகள் காட்டு உயிரினங்களை கட்டுப்படுத்தி, வனத்துக்குள் விடும் அறிவிப்பு அளிக்கப்படும் - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்

அரியலூர் பகுதி இளைஞர்கள் வேலைவாய்ப்பு குறித்து கேள்வி எழுப்பிய ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ கண்ணன்

வாசனை திரவியங்கள், பூக்கள் வளப்பகுதிக்கான தொழில் வாய்ப்புகள் குறித்து ஆராய்ந்து முயற்சி மேற்கொள்ளப்படும் - அமைச்சர் தங்கம் தென்னரசு

மணல் தானாகவே வெளியேறிவிடும் - கிருஷ்ணகிரி அணையை தூர்வார சொன்ன எம்.எல்.ஏவின் கேள்விக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதில்

எந்த அணையையும்  தூர்வார முடியாது; அணையை தூர்வாருகிறோம் என சும்மா சொல்லி கொள்ள வேண்டியதுதான். அணைகளில் மணற்போக்கி என்ற அமைப்பு மூலம் மணல் தானாகவே வெளியேறிவிடும் - கிருஷ்ணகிரி அணையை தூர்வார சொன்ன எம்.எல்.ஏவின் கேள்விக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதில்

திருவண்ணாமலை கிரிவலம் : முதல்வர் கொடுத்த அறிவுரை குறித்து அமைச்சர் எ.வ வேலு பேச்சு

நெடுஞ்சாலைத்துறை ஆய்வுக்காக கும்பகோணத்திற்கு  சென்றபோது முதல்வர் போன் செய்து அங்கே செல்ல வேண்டாம், திருவண்ணாமலை கிரிவலத்திற்கு 20 லட்சம் பக்தர்கள் வருகிறார்கள், அங்கு சென்று பணிகளை மேற்பார்வை பாருங்கள் என அறிவுரை வழங்கினார் - அமைச்சர் எ.வ.வேலு பேரவையில் பேச்சு

திரும்பெரும்புதூர் பாலம் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் - பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலு

திரும்பெரும்புதூர் பாலம் அமைத்தல், தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் இருப்பதால் சிக்கலில் உள்ளது. மத்திய அரசுக்கு அனுமதி பெற்று பாலம் அமைக்கும் முயற்சிகளை செய்யும் என செல்வப்பெருந்தனை எம்.எல்.ஏ கேள்விக்கு அமைச்சர் எ.வ.வேலு பதிலளித்தார்

சட்டப்பேரவை நிகழ்வுகளின் நேரலை..

Background

கடந்த மாதம் 18-ஆம் தேதி கூடிய தமிழக சட்டப்பேரவை நிகழ்வின்போது, 2022-2023ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். தொடர்ந்து 19-ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். தொடர்ந்து 21ம் தேதி முதல் 24ம் தேதி வரை பட்ஜெட் மீது விவாதம் நடைபெற்று பேரவை கூட்டம் முடிவடைந்தது. இந்நிலையில் மானியக்கோரிக்கை மீதான விவாதம் கடந்த 6-ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.