பழனி கோயிலில் ஆக்கிரமிப்பு அகற்றத்தின் பொழுது, திருக்கோயில் அதிகாரிகளுக்கும் ஆக்கிரமிப்பாளர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது‌. இந்நிலையில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக பேச வந்த திமுக கவுன்சிலர்களுக்கும் இடையேயான மோதலாக மாறியது. இதையடுத்து திமுக கவுன்சிலர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள்  தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் பழனி கோயில் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


IND vs BAN Test Day 1: முதல் நாள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 278 ரன்கள் குவிப்பு; புஜாரா, ஸ்ரேயஸ் அபாரம்..!




தொடர்ந்து இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போராட்டம் நடந்தநிலையில் கோவில் நிர்வாக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கோவில் உதவிஆணையர் லட்சுமி அனைவரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டதாகவும்,  அதை கோவில் உதவி ஆணையர் லட்சுமி ஏற்க மறுத்ததாகவும் தெரிகிறது. தொடர்ந்து உதவி ஆணையர் மீது அடிவாரம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் கோவில் அலுவலகத்திற்கு வெளியே நின்று இருந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் அத்து மீறி கோவில் இணையாணையர் அலுவலகத்திற்குள் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


இனிமேல் தான் உதயா என்ற நண்பன், உதயநிதி ஸ்டாலின் என்ற பெயரை.... நடிகர் விஷால் கூறியது என்ன?




Watch Video: சர்ச்சை மேல் சர்ச்சை; மீண்டும் TTF வாசன் வழக்குப்பதிவு; பொதுஇடத்தில் பொளந்து கட்டிய போலீஸ்!


இதையடுத்து கோவில் ஆணையர் அலுவலகத்திற்குள் நுழைந்தவர்களை திருக்கோவில் சார்பாக உள்ள ஒளிப்பதிவாளர் மற்றும் பத்திரிக்கையாளர்கள் படம் எடுத்தனர். அப்போது ஆவேசமடைந்த திமுகவினர் வீடியோ எடுக்கக் கூடாது என கூறி தேவஸ்தான ஒளிப்பதிவாளர் சந்தோஷ் என்பவரை தாக்கி அவரது கையில் இருந்த கேமராவையும் பிடுங்கினர். இதையடுத்து அங்கு தள்ளுமுள்ளு மற்றும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் கூட்டத்தை கலைத்தனர். பழனி கோவில் அலுவலகத்தில் நடந்த மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண