விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் பண்டிகை களைகட்டத் தொடங்கியுள்ளது. 


பூக்கள் விற்பனை:


திண்டுக்கல் மாவட்டத்தில் நிலக்கோட்டை, செம்பட்டி, சின்னாளபட்டி, கன்னிவாடி, ஆத்தூர், ஒட்டன்சத்திரம், பழனி, வேடசந்தூர் ,வடமதுரை, சாணார்பட்டி ,நத்தம், தொப்பம்பட்டி  உட்பட பல இடங்களில் பூக்கள் விளைகிறது. பூக்களுக்கு காலம் என்பது இங்கு இல்லை. அனைத்து மாதங்களிலும் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து பூக்களிலே பயிரிடப்படுகிறது. இங்கு விளையும் பூக்கள் திண்டுக்கல் அண்ணா வணிக வளாகத்தில் உள்ள பூ மார்க்கெட்டுக்கு கொண்டுவரப்படுகிறது.


Makkaludan Stalin App: ’மக்களுடன் ஸ்டாலின்’.. இன்று புதிய செயலியை வெளியிடுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.. எங்கு தெரியுமா?



விற்பனை ஜோர்:


இங்கிருந்து ஒட்டன்சத்திரம் மார்க்கெட், சென்னை , மதுரை, திருச்சி, தஞ்சாவூர், கோவை திருப்பூர், நாமக்கல், திருவண்ணாமலை உட்பட பல மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும்  கேரளா, மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. மலேசியா, சிங்கப்பூர், இலங்கை ஆகிய நாடுகளுக்கும் விமானம் மூலம் ஏற்றுமதி செய்யப்படுகிறது.


இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா நாளை திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். அதேபோல் வீடுகளில் மக்கள் சதுர்த்தி விழா வழிபாடு நடத்துவது வழக்கம். இந்த சதுர்த்தி விழா வழிபாடுகளில் பூக்கள் முக்கிய இடம் வகிக்கும். அதேபோல் இன்று ஞாயிற்றுக்கிழமை  ஆவணி மாத கடைசி திருமண முகூர்த்த நாள் ஆகும். எனவே சதுர்த்தி விழா மற்றும் திருமண முகூர்த்தம் எதிரொலியாக திண்டுக்கல் பூ மார்க்கெட்டுக்கு நேற்று விவசாயிகள் அதிக அளவில் பூக்களை கொண்டு வந்தனர்.


HBD PM Modi: செல்வாக்கு.. வெளியுறவுக்கொள்கை.. பிரதமர் மோடிக்கு இன்று பிறந்தநாள்..




மக்கள் கூட்டம்:


இந்த மார்க்கெட்டில் பூக்களை வாங்குவதற்கும் உள்ளூர், வெளியூர் வியாபாரிகள், பொதுமக்கள் இன்று குவிந்தனர். வியாபாரிகளும், பொதுமக்களும் போட்டி, போட்டி பூக்களை வாங்கினர். இதனால் பூக்களின் விலை கிடு, கிடுவென உயர்ந்தது. அதன்படி கடந்த வாரம் கிலோ ரூ.500-க்கு விற்ற மல்லிகைப்பூ நேற்று ரூ.3 ஆயிரத்து 500-க்கு விற்றது.இதேபோல் ரூ.150-க்கு விற்ற கனகாம்பரம் ரூ.800-க்கும், ரூ.200-க்கு விற்ற முல்லைப்பூ ரூ.800-க்கும், ரூ.250-க்கு விற்ற சாதிப்பூ ரூ.750-க்கும், ரூ.80-க்கு விற்ற அரளிப்பூ ரூ.200-க்கும், ரூ.120-க்கு விற்ற சம்பங்கி ரூ.400-க்கும், ரூ.30-க்கு விற்ற செவ்வந்தி ரூ.100-க்கும் விற்பனை ஆனது. பூக்களின் விலை உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


HBD Periyar: அறிவைத் தடுப்பாரை மண்ணோடு பெயர்த்த கடப்பாரை.. இன்று பெரியாருக்கு பிறந்தநாள்..