ராமாயண காவியம் நடைபெற்ற நகரங்களை இணைத்து இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் ராமாயண காவிய சுற்றுலா சிறப்பு ரயிலை நவம்பர் மாதம் இயக்குகிறது. இந்த சிறப்பு ரயில் மதுரையிலிருந்து வருகிற நவம்பர் 16 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை புறப்பட்டு திண்டுக்கல், திருச்சி, கும்பகோணம், கடலூர், விழுப்புரம், சென்னை எழும்பூர் வழியாக இயக்கப்பட இருக்கிறது.



 

இந்த ரயில் மூலம் ராமாயண காவியம் தொடர்புடைய நகரங்களான ஹம்பி, நாசிக், சித்திரக்கூடம், காசி, கயா, சீதா மார்ஹி, நேபாளம் ஜனக்புரியில் உள்ள சீதா ஜென்ம பூமி, அயோத்தியில் ராம ஜென்ம பூமி நந்திகிராம், சிருங்க வெற்பூர், அலகாபாத் போன்ற சரித்திரப் புகழ் வாய்ந்த இடங்களை தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த 14 நாட்கள் சுற்றுலாவில் உணவு, தங்குமிடம், ரயில் கட்டணம், உள்ளூர் சாலை போக்குவரத்து செலவு உட்பட நபர் ஒருவருக்கு கட்டணம் ரூபாய் 14490/- வசூலிக்கப்படும்.



 

இதை சற்று கவனிக்க - *Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*




 

மத்திய மாநில அரசுகளின் கொரோனா தொற்று தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளின் படி நடத்தப்படும். இந்த சுற்றுலாவில் கலந்து கொள்ள விரும்பும் பயணிகள் கண்டிப்பாக 2 தவணை தடுப்பூசிகள் போட்டிருக்க வேண்டும். மத்திய மாநில அரசு ஊழியர்கள் எல்டிசி (விடுமுறை சுற்றுலா சலுகை) வசதி மூலமும் இந்த சுற்றுலாவில் கலந்து கொள்ளலாம். இந்த ரயிலுக்கு பயணச்சீட்டு பதிவு செய்ய அலைபேசி எண் 8287931977 ஐ தொடர்பு கொள்ளலாம்.






இந்த ரயிலுக்கான பயணச்சீட்டுகளை www.irctctourism.com என்ற இணையதளத்திலும் பதிவு செய்து கொள்ளலாம்.