சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கீழடியில் 7ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி தொடங்கியது. இதை தொடர்ந்து கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் உள்ளிட்ட 4 இடங்களில் அகழாய்வுப் பணிகள் நடைபெற்றது.  மணலூர் பகுதியில் தொல்லியல் எச்சங்கள் எதுவும் கிடைக்காத நிலையில் அங்கு மட்டும் அகழாய்வுப் பணி நிறுத்தப்பட்டது. மற்ற மூன்று இடங்களிலும் அகழாய்வுப் பணி நடைபெற்று வருகிறது.



இதை சற்று கவனிக்கவும் *Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*






கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த கனமழையின் காரணமாக, அகழாய்வுப் பணியில் தொய்வு ஏற்பட்டு வருகிறது.   சமீபத்தில் கீழடியில், 2 அடி உயரமுள்ள தானிய கொள்கலன் கண்டுபிடிக்கப் பட்டது. இது 348 செ.மீ நீளத்தில் சிவப்பு நிற ஜாடி வடிவ மண்பாண்டமாகும். இதன் கழுத்துப்பகுதி இல்லாத, வாய்ப்பகுதி உட்புறம் மடிந்த நிலையிலும், இதன் சுவர் 2 செ.மீ., தடிமனுடனும். இதன் மைய உள்பகுதி, 30 செ.மீ. சுற்றளவும்.  இதன் வெளிப்புற மையப்பகுதியில், கயிறு போன்ற வடிவமைப்பும். கழுத்து பகுதியில், கை கட்டை விரலால் அழுத்தப்பட்ட வடிவமைப்பு உள்ளது. இந்த கொள்கலன், தானியம் சேமிக்க பயன்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. மிகவும் நேர்த்தியாக உள்ள இந்த மண்பாண்டம், ஆய்வாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த கொள்கலன் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு தற்போது ட்வீட் செய்துள்ளார். அதில் “ கீழடியில் அண்மையில் கண்டறியப்பட்டுள்ள சிவப்பு வண்ணகொள்கலன் (Huge storage jar of Red Slipped ware)” என குறிப்பிட்டுள்ளார்.







 



மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Karankadu Eco Tourism : காரசார நண்டு, கடல் பயணம், காரங்காடு சூழல் சுற்றுலா.. கண்டிப்பா ஒரு டூர் போடுங்க..!


மேலும்  தொல்லியல் ஆர்வலர் கூறுகையில்... ”கீழடியில் கொரோனா  முழு ஊரடங்கு காலகட்டதில் பணிகள் நடைபெறவில்லை. தற்போது மழைப்பொழிவு இருந்து வருகிறது. எனவே செப்டம்பர் மாதத்தோடு அகழாய்வுப் பணியை நிறுத்தாமல் கூடுதலாக இரண்டு மாதம் ஒதுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.


இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - ”ஒரு விழிப்புணர்வுதான்” - பூக்கடைக்காரர் மோகன்: மதுரையில் மணக்கும் மல்லிகைப்பூ மாஸ்க் !