திண்டுக்கல்லில் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரணைக்கு அனுமதிக்க கோரி நீதிமன்றத்தில் லஞ்ச ஊழல் தடுப்பு  காவல்துறையினர் மனு தாக்கல் செய்த நிலையில் 2 நாட்கள் விசாரணை செய்ய நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.


Telangana Politics: ஆரம்பமே அதிரடி..! முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியை சந்தித்த விவகாரம்: தெலங்கானா டிஜிபியின் சஸ்பெண்ட் ரத்து



திண்டுக்கல்லில் கடந்த 1ம் தேதி திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டாக்டர் சுரேஷ்பாபுவிடம் ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கியதாக மதுரையைச் சேர்ந்த அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரால்  கைது செய்யப்பட்டார். மேலும் அவரிடம் இருந்து லஞ்ச பணம் 20 லட்சம்  மற்றும் லஞ்சம் வாங்க பயன்படுத்தப்பட்ட கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.


மிக்ஜாம் பேரிடரில் சிறப்பாக செயல்பட்ட தூய்மை பணியாளர்கள்.. ரூ.4000 ஊக்கத்தொகை வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்..




இதனையடுத்து 15 மணி நேர விசாரணைக்கு பின்பு தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி மோகனா முன்பு ஆஜர் படுத்தப்பட்டு வருகின்ற 15.12.23 வரை காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து  அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் விவேக் பாரதி மனு தாக்கல் செய்தார். இது தொடர்பான வழக்கு  05.12.23  விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார்.


Trichy Srirangam Temple: ஸ்ரீரங்கம் கோயிலில் ரத்தம் சிந்திய ஆந்திர பக்தர்; நடை அடைப்பு - நடந்தது என்ன..?



இதனையடுத்து  இன்று 12 12.2023 லஞ்ச ஊழலில் ஈடுபட்ட அதிகாரியை விசாரிக்க 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். நேரில் ஆஜார்படுத்தப்பட்ட அங்கித் திவாரியை விசாரித்த, நீதிபதி மோகனா , லஞ்ச ஒழிப்பு போலீசார் 2 நாட்கள்  காவலில் வைத்து விசாரணை செய்து வரும் 14ஆம் தேதி மாலை 5 மணிக்கு நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.