மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் இயற்கை அழகை ரசிப்பதற்காகவும், குளிர்ச்சியான சூழலை அனுபவிப்பதற்காகவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.



அவர்கள் வெள்ளி நீர்வீழ்ச்சி, நகரின் மையப்பகுதியில் உள்ள நட்சத்திர ஏரி, பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா ஆகியவற்றுக்கு சென்று பார்வையிடுகின்றனர். இங்கு வனத்துறை கட்டுப்பாட்டின் கீழ் மோயர் பாயிண்ட், பைன் மரக்காடு, பில்லர் ராக், குணா குகை, பேரிஜம் ஏரி ஆகிய இடங்களுக்கும் சுற்றுலாப் பயணிகள் சென்று வருகின்றனர்.


Cyclone Michaung: புயல் பாதிப்புகளை மதிப்பீடு செய்ய சென்னை வந்த மத்திய குழுவினர்.. இன்றும் நாளையும் ஆய்வு..



இந்த நிலையில் கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு மோயர் பாயிண்ட், பைன் ஃபாரஸ்ட், குணா குகை, பில்லர் ராக், பெரிஜம் செல்வதற்கு வாகனங்களுக்கு கட்டணம் செலுத்தி செல்லும் செயல்பாட்டு முறையை கொண்டுவர கொடைக்கானல் வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். இந்த திட்டம் ஜனவரி மாதம் 1ஆம் தேதி முதல் அமல்படுத்த உள்ளார்கள்.


Kerala Governor: அய்யய்யோ..! ”என்னை அடிக்க முதலமைச்சரே ஆட்களை அனுப்பினார்” - கேரள ஆளுநர் பகிரங்க குற்றச்சாட்டு



வாகனம் நுழைவு கட்டணங்கள் பேருந்திற்கு ரூ.100, கார் மற்றும் வேன் ரூ.50, இருசக்கர வாகனங்களுக்கு ரூ.20 என வசூலிக்கப்படும். இதில் கொடைக்கானலை சேர்ந்த டாக்ஸி Taxi (van) அசோசியேசன் உள்ளவர்களுக்கு வனத்துறை சார்பாக ஸ்டிக்கர் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.


இந்த ஸ்டிக்கரை ஒட்டிய வாகனங்களுக்கு அனுமதி இலவசம் என்பதையும் ஸ்டிக்கர் ஒட்டாத வாகனங்களுக்கு பணம் செலுத்தி தான் சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல வேண்டும் என்று வனத்துறை அறிவித்துள்ளது. அதேபோல் கொடைக்கானலில் உள்ள மக்களுக்கு வாகனங்களில் சென்றால் கட்டணம் செலுத்தி தான் செல்ல வேண்டும் என்றும் கூறியுள்ளார்கள்.


Rajinikanth Birthday: ஓப்பனிங் சாங் ட்ரெண்டை உருவாக்கியவர் ‘சூப்பர் ஸ்டார்.. டாப் 5 அறிமுக பாடல்கள் லிஸ்ட் இதோ!