மேற்கு தொடர்சி மலைகள் அமைந்துள்ள மாவட்டமான தேனி மாவட்டத்தில் வைகை அணை, மஞ்சலாறு அணை, சண்முகா நதி அணை, சோத்துப்பாறை அணை, முல்லை பெரியாறு அணை ஆகியவை முக்கிய நீராதாரங்களாக அமைந்துள்ளன. தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி  செல்லும் வழியில் வைகை ஆற்றுக்கு குறுக்கே கட்டப்பட்டுள்ள அணை வைகை அணையின் நீரை கொண்டு மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் விவசாயம் நடைபெறுகிறது.




மேலும் மதுரை மாநகரின் குடிநீர் தேவையும் வைகை ஆற்றின் நீரை கொண்டு பூர்த்தி செய்யப்படுகிறது. 71 அடி உயரம் கொண்ட வைகை அணை கட்டப்பட்டு 64 ஆண்டுகளில் இதுவரையில் 5 முறை மட்டுமே முழு கொள்ளளவை எட்டி  உள்ளது. குறிப்பாக இந்த ஆண்டில் மட்டுமே 2 முறை அணையில் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. அதில் இந்த ஆண்டும் ஒன்றாகும். இந்த ஆண்டில் வைகை அணை கடந்த ஜனவரி மற்றும் ஜூன் மாதத்தில் முழுக்கொள்ளளவை எட்டியது.  இதையடுத்து ஜூன் மாதம் முதல் 5 மாவட்ட விவசாயத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. அப்போது நீர்வரத்து போதுமான அளவில் இருந்ததால் நீர்மட்டம் 10 அடி மட்டுமே சரிந்தது.




இந்நிலையில் வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 4,025 கனஅடியாக அதிகரித்து உள்ளது. மேலும் நீர்மட்டம் 66 அடியாக உயர்ந்துள்ளதால் முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது அணையில் இருந்து வினாடிக்கு 969 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.  பொதுவாக வைகை அணை நீர்மட்டம் 66 அடியை எட்டும்போது முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும், 68.50 அடியை எட்டும்போது 2 ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும், 69 அடியை எட்டும் போது 3 ஆவது கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்படும். மேலும் அணைக்கு வரும் தண்ணீர் உபரியாக ஆற்றில் திறக்கப்படும்.




வரலாற்றில் முதன்முறையாக இந்த ஆண்டு, வைகை அணை ஒரே ஆண்டில் 3ஆவது முறை நிரம்பும் நிலை உருவாகியுள்ளது. இதனால் 5 மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


தகவல்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்,


பேபி அணையை பலப்படுத்திய பின் விரைவில் முல்லை பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கப்படும் என அமைச்சர் துரைமுருகன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேட்டியளித்தார்.


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூப்பில் வீடியோக்களை காண