தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே உள்ள மேல்மங்கலத்தில் வித்யபாரதி வேதபாடசாலை இயங்கி வருகிறது. இங்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். தற்போது இந்த பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள வராக நதியில் வெள்ளம் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இங்கு தங்கி படிக்கும் 5 மாணவர்கள் நேற்று வராக நதி வெள்ளத்தை வேடிக்கை பார்க்க சென்றுள்ளனர். அவர்களில் சென்னை திருவான்மியூரை சேர்ந்த மணிகண்டன் (20) என்ற மாணவர் திடீரென ஆற்றில் தவறி விழுந்தார். இதை பார்த்து மற்ற மாணவர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். அப்போது மதுரையை சேர்ந்த சுந்தரநாராயணன் (18) என்ற மாணவரும் திடீரென ஆற்றில் தவறி விழுந்தார். இதையடுத்து மணிகண்டனும், சுந்தரநாராயணனும் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.
இதுகுறித்து ஜெயமங்கலம் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சுந்தரநாராயணன் மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரையும் தேடும் பணியில் 4 மணி நேரம் வராக நதி ஆற்றுப்பகுதியில் தேடியும் மாணவர்களின் உடல் கிடைக்காத நிலையில் நேற்று மாலை முதல் தொடர்ந்து மழை பெய்ததால் வராகநதி ஆற்றில் மேலும் வெள்ளப்பெருக்கு அதிகரித்த நிலையில் இரவு நேரமும் ஆனதால் மாணவர்களின் உடலை தேடும் பணியினை கைவிட்டனர்.
இந்நிலையில் பெரியகுளம் தீயணைப்புத்துறையினர் இன்று 2 ஆவது நாளாக வராகநதி ஆற்றில் காலை 7 மணி முதல் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மாணவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் மேல்மங்கலம் அருகே முத்தையா கோவில் பகுதியில் உள்ள வராக நதி ஆற்றுப் பகுதியில் நேற்று ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மதுரையைச் சேர்ந்த சங்கரநாராயணன் வேத பாடசாலை மாணவன் பயிலும் மாணவன் ஆற்றுநீர் அடித்துச் செல்லப்பட்டு கரையோரம் உள்ள செடிகளுக்கு இடையே சிக்கி பலியான நிலையில் உடல் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. மேலும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மற்றொரு மாணவரை தீயணைப்பு துறையினர் தொடர்ந்து தீவரமாக தேடி வருகின்றனர்.
தகவல்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்,
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்