தீர்வு கிடைக்கும்... முல்லை பெரியாறு அணை திடீர் விசிட்டுக்கு பின் அமைச்சர் துரைமுருகன் பேச்சு!

பேபி அணையை பலப்படுத்திய பின் விரைவில் முல்லை பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கப்படும் என அமைச்சர் துரைமுருகன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேட்டியளித்தார்.

Continues below advertisement

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள முல்லை பெரியாறு அணையானது தமிழ்நாட்டில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு முக்கிய நீராதாரமாக விளங்குகிறது. முல்லைப் பெரியாறு அணையின் மொத்த நீர்மட்டம் 155 அடி ஆகும். 15.5 டிஎம்சி தண்ணீர் சேமிக்கலாம். 142 அடி வரை தண்ணீர் தேக்கிக் கொள்ள தமிழகத்துக்கு உரிமை உண்டு என கடந்த 2006 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் இரண்டு முறை உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பேபி அணையை பலப்படுத்தி விட்டு முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்றும் கடந்த 2014 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் வரலாற்று மிக்க ஒரு சிறப்பு தீர்ப்பு அளித்தது.

Continues below advertisement

முல்லை பெரியாறு அணையில் துரைமுருகன் தலைமையிலான அமைச்சர்கள் குழு இன்று ஆய்வு...!

இந்த நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில வாரங்களாக பெய்த தொடர் மழை காரணமாக அணையின் நீர்வரத்து அதிகரித்ததையடுத்து கேரள அமைச்சர் முன்னிலையில் அணையிலிருந்து தண்ணீர்  திறந்துவிட்டதாக புகார் எழுந்து வந்த நிலையில் இன்று நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன் தலைமையில் கூட்டுறவுத்துறை அமைச்சர்  இ.பெரியசாமி,  வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி , உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி உட்பட தமிழக பொதுப்பணிதுறை அதிகாரிகள் முல்லை பெரியாறு அணையில் ஆய்வு மேற்கொண்டனர்.

முல்லை பெரியாறு அணை, பேபி அணை என 3 மணி 30 நிமிடங்கள் நடைபெற்ற ஆய்வுக்கு பின் தமிழக நீர்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில் "நீர்பாசனத்துறை அமைச்சர் என்கிற முறையில் முல்லை பெரியாறு அணையை ஆய்வு செய்தேன், கொரோனா காலம் என்பதால் என்னால் ஆய்வு செய்ய முடியவில்லை, படிப்படியாக தமிழகத்தில் உள்ள அணைகளை நேரில் ஆய்வு செய்ய உள்ளேன், சமீபத்தில் நடைபெற்ற உச்சநீதிமன்ற வழக்கில் மத்திய நீர்வள ஆதார அமைப்பு ரூல் கரூர் என்கிற புதிய சட்டத்தை நிறைவேற்றி உள்ளதை நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளது, ரூல் கரூர் சட்டப்படி 30 ஆண்டுகள் அணைக்கு எவ்வளவு தண்ணீர் வந்துள்ளது என்கிற கணக்கெடுப்பு செய்யப்பட்டு உள்ளது, கணக்கெடுப்பின்படி அணையின் தண்ணீர் நிறுத்தம் உயரத்தை முடிவு செய்ய வேண்டும் என கூறப்பட்டு உள்ளது,

அதன்படி நவம்பர் 10 ஆம் தேதி 139.5 அடியாக இருக்க வேண்டும் என சொல்லப்பட்டு உள்ளது, நவம்பர் 30 ஆம் தேதி 142 அடியாக உயர்த்தி கொள்ளலாம் என சொல்லப்பட்டு உள்ளது, புதிய விதிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டு உள்ளதால் விதிமுறைகளின் படியே தமிழக அரசு நடந்து கொண்டு உள்ளது, நீரின் அளவை கொண்டே தண்ணீர் திறக்கப்பட்டு வருகின்றது, முல்லை பெரியாறு பிரச்சினை என்பது நீண்டகால பிரச்சினையாக உள்ளது, இடைக்காலம், எதிர்கால திட்டங்கள் என 3 திட்டங்கள் முல்லை பெரியாறு அணையில் தமிழக அரசு பராமரிப்பு பணிகளை செயல்படுத்தி உள்ளது,

முல்லை பெரியாறு அணையில் அனைத்து பராமரிப்பு பணிகளும் செய்த பின் உச்சநீதிமன்றத்தை தமிழக அரசு அணுகி 152 அடி நீரை தேக்க அனுமதி கேட்ட போது பேபி அணையை பராமரித்து விட்டு அணையின் நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்தி கொள்ள அனுமதி அளித்தது, கேரளா அரசை அணுகி பேபி அணையை பராமரிக்க அனுமதி கேட்டால் வனத்துறையை கை காட்டுகிறது, பேபி அணையில் 3 மரங்கள் உள்ளன, 3 மரங்களை அகற்றினால் மட்டுமே பேபி அணையை பாரமரிக்க முடியும், மரங்களை அகற்ற வனத்துறை அனுமதி அளிக்கவில்லை,

ஆகவே விரைவில் பேபி அணை பராமரிப்பு செய்யப்பட்டு அணையின் நீர் மட்டம் 152 அடியாக உயர்த்தப்படும், முல்லை பெரியாறு அணையில் இருந்து தமிழகத்திற்கு கூடுதல் நீர் வழங்குவது இரு மாநில அரசுகள் பேசி முடிவு செய்ய வேண்டிய ஒன்று, அதிமுக போராட்டத்தால் நாடே கிடு கிடுவென ஆக போகிறது, முல்லை பெரியாறு அணை குறித்து பேசுவதற்கு இ.பி.எஸ் - ஒ.பி.எஸ் க்கு தார்மீகம் இல்லை, அதிமுக ஆட்சி காலத்தில் முல்லை பெரியாறு அணையை ஆய்வு செய்யவில்லை 80 வயதிலும் நான் நேரில் ஆய்வு சென்று உள்ளேன், ரூல் கரு படியே தண்ணீர் திறக்க முடியும், முல்லை பெரியாறு அணையில் அதிகாரிகள் பணி செய்ய ஏதுவாக விரைவில் 2 அது விரைவு படகுகள் வாங்கப்படும், பிரனாயி விஜயன் மீது எனக்கு மட்டற்ற மரியாதை உண்டு, அவருடைய ஆட்சி காலத்திலேயே முல்லை பெரியாறு அணைக்கு தீர்வு கிடைக்கும் என நம்புகிறேன்" என கூறினார்.

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 

யூடியூப்பில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola