பத்திரவுப்பதிவு அலுவலகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்தவரின் குடும்பத்தினர் உடலை வாங்க மறுத்து கனமழையிலும் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

 

பத்திரப்பதிவு அலுவலகத்தில் தீக்குளிப்பு:


 

மதுரை மாவட்டம் ஊமச்சிக்குளம் அருகே எருக்கலை நத்தம் பகுதியைச் சேர்ந்த மாதவன் (50) என்பவருக்கு சொந்தமான 14 சென்ட் நிலத்தை சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த கனகவேல் என்பவரிடம் அடமானம் வைத்துள்ளார். இந்நிலையில் அடமான காலம் முடிவடைந்த சில மாதங்கள் ஆன நிலையில் மாதவனின் இடத்தை நேற்று 15 நபர்களுக்கு பத்திரப்பதிவு செய்வதற்கு கனகவேல் நேற்று  செட்டிகுளம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் வந்துள்ளார்.

 




 

அப்போது தான் அடகுவைத்த இடத்தினை வேறு நபர்களுக்கு பத்திரப்பதிவு செய்யக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து திடீரென தின்னரை உடலில் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். இதனையடத்து  95 சதவீத தீக்காயங்களுடன் அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் மாதவனின் உயிரிழப்புக்கு காரணமானவர்களை் மீது நடவடிக்கைகள் எடுக்க கோரி உயிரிழந்த மாதவனின் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முன்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாதவனின் மனைவி திடீரென மயங்கி விழுந்ததால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. 



 

கனமழையிலும் சாலை மறியல்:


 

ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராட்டம் நீடித்த நிலையில் மறியலில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியும் களையாமல் கனமழையிலும் நனைந்தபடி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனையடுத்து  காவல்துறையினர் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கைகள் எடுப்பதாக கூறிய நிலையில் கலைந்து சென்றனர்..

 

உயிரிழந்த மாதவனின் மகன் மற்றும் மனைவி செய்தியாளர்களிடம் பேசுகையில், மாதவனின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

 


வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.

 

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

 

 





இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Sivagangai: திருப்பாச்சேத்தியில் வாமனச் சின்னம் பொறித்த நிலதானக்கல் கண்டுபிடிப்பு ; தொல்நடை குழுவிற்கு பாராட்டு