ஆளுநர் ரவி பங்கேற்ற பட்டமளிப்பு விழாவை 45 பேர் செனட் உறுப்பினர்கள் புறக்கணிப்பு - விழாவை புறக்கணித்த பேராசிரியர்களை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்த சு.வெங்கடேசன் எம்.பி


முனைவர் பட்டத்தை வாங்க மறுத்து பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த பேரா. சுரேஷ், பேரா. ரமேஷ்ராஜ் இருவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்தேன் என பதிவு.


மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் 55ஆவது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்று முடிந்தது. இதில் பல்கலைக் கழக வேந்தரும் தமிழக ஆளுநருமான  ஆர்.என்.ரவி கலந்துகொண்டு பல்வேறு துறைகளில் முனைவர் படிப்பு முடித்தவர்வளுக்கு பட்டங்களை வழங்கி கௌரவித்தார். இந்த நிகழ்ச்சியில் விடுதலைப் போராட்ட வீரர் சங்கரய்யாவிற்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க பல்கலைக்கழகம் பரிந்துரைத்த நிலையில் அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததை கண்டித்து தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கவில்லை. இந்நிலையில்  நேற்று ஆளுநர் தலைமையில் பட்டமளிப்பு விழா முடிவடைந்த நிலையில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது சமூகவலைதள பக்கத்தில் ஆளுநர் கையால் பட்டங்களை பெற மறுத்த சிண்டிகேட் மற்றும் செனட் உறுப்பினர்களுக்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டிருந்தார். இந்நிலையில் ஆளுநர் ரவி பங்கேற்ற பட்டமளிப்பு விழாவை 45 பேர் செனட் உறுப்பினர்கள் விழாவை புறக்கணித்த பேராசிரியர்களை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார் மதுரை எம்.பி சு.வெங்கடேசன்.






நேற்று மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ஆளுநர் தலைமையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவை புறக்கணித்தது தொடர்பாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் முகநூல்  தளத்தில் பதிவிட்டுள்ளதில் : “கல்விக்கழகு  கசடுகளை புறந்தள்ளல்” விடுதலை போராட்ட மாண்பையும், பல்கலைக்கழகத்தின் உரிமையையும் அவமதிக்கும் விதமாகவும் நடந்து கொண்டார் ஆளுநர் ரவி. எனவே அவர் பங்கெடுத்த  மதுரை காமராசர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை செனட் உறுப்பினர்கள் 73 பேரில் 45 பேர் புறக்கணித்துள்ளனர். இது இந்தியப்பல்கலைக்கழக வரலாற்றின் மகத்தான போராட்டமாகும்.  தங்களின் முனைவர் பட்டத்தை வாங்க மறுத்து பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த பேரா. சுரேஷ், பேரா. ரமேஷ்ராஜ் இருவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்தேன்.


இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Sivagangai: திருப்பாச்சேத்தியில் வாமனச் சின்னம் பொறித்த நிலதானக்கல் கண்டுபிடிப்பு ; தொல்நடை குழுவிற்கு பாராட்டு