தாம்பரம் எர்ணாகுளம் ரயில் நிலையங்களுக்கிடையே ஒரு வாராந்திர சிறப்பு ரயிலை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி எர்ணாகுளம் - தாம்பரம் வாராந்திர சிறப்பு கட்டண ரயில் (06068) எர்ணாகுளத்தில் இருந்து நவம்பர் 28 முதல் ஜனவரி 2 வரை திங்கட்கிழமைகளில் மதியம் 01.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.00 மணிக்கு தாம்பரம் சென்று சேரும்.
மறு மார்க்கத்தில் தாம்பரம் - எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு கட்டண ரயில் (06067) தாம்பரத்தில் இருந்து நவம்பர் 29 முதல் ஜனவரி 3 வரை செவ்வாய்க்கிழமைகளில் மாலை 03.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.00 மணிக்கு எர்ணாகுளம் சென்று சேரும். இந்த ரயில்கள் கோட்டயம், செங்கனாச்சேரி, திருவல்லா, செங்கனூர், மாவேலிக்கரா, காயன்குளம், கரு நாகப்பள்ளி, சாஸ்தான்கோட்டா, கொல்லம், குண்டரா, கொட்டாரக்கரா, அவணேஸ்வரம், புனலூர், தென்மலை, செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதிப்பெட்டி, 2 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 7 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள் மற்றும் 2 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகளுடன் கூடிய சரக்கு பெட்டிகள் இணைக்கப்படும். இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு நவம்பர் 25 அன்று காலை 8 மணிக்கு துவங்குகிறது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - டோல் பிரச்னை ; இனி உள்ளூர் மக்கள் கட்டணமின்றி வாகனங்களில் பயணிக்கலாம் - அமைச்சர் மூர்த்தி
மேலும் செய்திகள் படிக்க - மானாவாரி நிலத்திலும் மரம் வளர்த்து லட்சங்களில் சம்பாதிக்கலாம்: கருத்தரங்கு நடத்தும் காவேரி கூக்குரல்! விபரம் உள்ளே !
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்