இராமநாதபுர மாவட்டத்தை சேர்ந்தவர் அருள் வில்சன் (36). இவர் ரேணுகா தேவி என்ற பெண்ணை  காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 10 வயதில் மகனும் 8 வயதில் மகள் ஒருவரும் இருக்கின்றனர். அருள் வில்சன் சென்னையில்  வேலை செய்து வருகிறார்.

 

இதையடுத்து ரேணுகா தேவி தனது உறவினர் ஒருவருடன் சிவகங்கை மாவட்டம்  திருப்புத்தூர் அருகே உள்ள வேட்டங்குடிபட்டி கிராமத்தில் வசிக்கும் ராமகிருஷ்ணன் (48)  என்பவரிடம் குறி பார்க்க  சென்றுள்ளனர்.



அப்போது அருள் வில்சன் மனைவிக்கும்  சாமியார் ராமகிருஷ்ணனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அடிக்கடி குறி பார்க்க சென்றுள்ளார்.

 

கணவருக்கு சரியான வேலை அமையவில்லை எனக் கூறி குறி பார்த்துள்ளார். அப்போது ரச மணி ஒன்றை ரேணுகா தேவியிடம் கொடுத்து இதை கழுத்தில் அணிந்து கொண்டால் விரைவில் நீ கோடீஸ்வரி ஆகிடலாம் என ஆசைவார்த்தை கூறியுள்ளார். 8 வயது மகளுக்கு அம்மாவசை இரவு சிறப்பு பூஜை செய்தால் செல்வம் பெருகும் எனக் கூறியுள்ளார். 

 

இதை நம்பிய ரேணுகா தேவி, கடந்த மாதம் காரைக்குடி அருகே உள்ள மானகிரி காட்டு பகுதியில் உள்ள  போலிச் சாமியார் ஆசிரமத்தில் அம்மாவசை பூஜையில்  சிறுமியை நிர்வாணமாக அமர வைத்து போலி சாமியார்  பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.



இதற்கு தாய்  உடந்தையாக இருந்துள்ளார். சம்பவம் குறித்து சிறுமி தனது தந்தையிடம் கூற அவர்  மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் வசம் புகார் தெரிவித்தார். புகாரினை அடுத்து திருப்புத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் ஆத்மநாபன், காவல் ஆய்வாளர் சுந்தர மகாலிங்கம் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு மேற்படி போலிச் சாமியார்  ராமகிருஷ்ணன், மற்றும் உடந்தையாக இருந்த சிறுமி தாய் மீது நாச்சியாபுரம் போலீசார் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்து சிறையில் அடைந்தனர்.

 


 


 




ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர