ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்த பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவரின் 115 ஆவது ஜெயந்தி மற்றும் 60வது குருபூஜை  வருகின்ற அக்டோபர் 30-ம் தேதி நடைபெற உள்ளது. இதனை அடுத்து தேவர் நினைவிடத்திற்கு முதலமைச்சர், அமைச்சர்கள், சமுதாய தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வர உள்ளனர்.



 

இதனை அடுத்து தென்மண்டல ஐஜி அஸ்ராகர்க்  தலைமையில் 5 டிஐஜி, 28 எஸ்பி கலந்து கொண்டு கமுதி தனி ஆயுதப்படை அலுவலகத்தில் பாதுகாப்பு முன் ஏற்பாடு குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

 



அதன் பின்னர் செய்தியாளரை சந்தித்த தென்மண்டல ஐ.ஜி  தேவர் குருபூஜைக்கு  பாதுகாப்பு பணியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பத்தாயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் 13 ட்ரோன் கேமிரா மூலம் தேவர் குருபூஜைக்கு வரக்கூடியவர்களை கண்காணிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்ததோடு வரக்கூடிய பொதுமக்கள் அரசு வழிமுறைகளை பின்பற்றி வர வேண்டும், வாகனங்களின் மேற்கூரையில் பயணம் செய்து வரக்கூடாது  என தெரிவித்தார்.


 

 





 




அதே போல் ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 115 வது ஜெயந்தி 60வது குருபூஜை விழாவை முன்னிட்டு தென்மாவட்ட  அளவிலான இரட்டை மாட்டு வண்டி பந்தயம் மூன்று பிரிவுகளாக நடைபெற்றது. இதில் பங்கேற்ற காளைகள்  வெற்றி இலக்கை நோக்கி சீறிப் பாய்ந்து சென்றன. ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 81மாட்டுவண்டிளுடன்  பந்தயம் வீரர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். முதல் நான்கு இடங்களைப் பெற்ற மாட்டுவண்டி பந்தயம் வீரர்களுக்கு ரொக்கப் பணம், ஆட்டு கிடாய்கள் பரிசாக வழங்கப்பட்டது. இந்த மாட்டு வண்டி பந்தயத்தில் பல்வேறு பகுதியில் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் சாலையில் இருபுறமும் நின்று ஆரவாரத்துடன்  கண்டு ரசித்தனர்.