தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் குறிப்பாக  அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கப்படும் என்பதும் ஒன்று ஆகும். மேலும், இதில் முதல்கட்டமாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்படும் என தெரிவித்தார்.


Vegetables Price List: கேரட், பீன்ஸ் விலை கிடுகிடு உயர்வு..! அப்போ மற்ற காய்கறிகள் விலை எப்படி..?




இதன்படி முதல்கட்டமாக 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் காலைச் சிற்றுண்டி திட்டம்  செயல்படுத்தபடவுள்ளது. இந்த 1,545 பள்ளிகளில் பயிலும் 1,14,095 மாணவ, மாணவியர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது. இந்தத் திட்டத்திற்கு ரூ.33.56 கோடி ஒதுக்கீடு அரசு அறிவித்துள்ளது.


Traffic New Rules : வாகன ஓட்டிகளே உஷார்..! இன்று முதல் அமலுக்கு வருகிறது புதிய அபராதம்..! ஒழுங்கா ஓட்டுனா தப்பிக்கலாம்..



திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை திண்டுக்கல் மாநகராட்சி, கொடைக்கானல் ஒன்றிய பகுதியில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் திண்டுக்கல் மாநகராட்சியில் 14 தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 1,233 மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது. இதற்காக திண்டுக்கல் நேருஜி நினைவு மேல்நிலைப்பள்ளியில் சமையல் கூடம் அமைத்து உணவு தயாரிக்கப்படுகிறது. மேலும் கொடைக்கானல் ஒன்றியத்தில் 34 பள்ளிகளில் பயிலும் 1,052 மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது.




அதை அந்தந்த பகுதிகளை சேர்ந்த சுயஉதவிக்குழுவினர் தயாரித்து வழங்குகின்றனர். இதன்மூலம் மொத்தம் 48 பள்ளிகளில் 2 ஆயிரத்து 285 மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது. இவர்களுக்கு வெண்பொங்கல்-காய்கறி சாம்பார், ரவா காய்கறி கிச்சடி, அரிசி உப்புமா-காய்கறி சாம்பார், வரகு பொங்கல்-காய்கறி சாம்பார், சாமை கிச்சடி, ரவா கேசரி உள்ளிட்டவை காலை உணவாக வழங்கப்படுகின்றன.


World's Dirtiest Man : 50 ஆண்டுகளாக குளிக்காத ‘ உலகின் அழுக்கு மனிதர்’ ! - குளித்த ஒரே மாதத்தில் உயிரிழப்பு !


இந்த காலை உணவு தினமும் காலை 7.30 மணிக்கு வழங்கப்பட்டு வருகிறது என்று மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்