ரயில் போக்குவரத்தில் மாற்றம்


 

சென்னை கோட்டத்தில் உள்ள தாம்பரம் ரயில் நிலையத்தில் ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக ரயில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி ஆகஸ்ட் 18 அன்று திருநெல்வேலி - சென்னை எழும்பூர் வந்தே பாரத் ரயில் (20666) முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. ஆகஸ்ட் 16 மற்றும் 17 ஆகிய நாட்களில் சென்னை எழும்பூர் - திருநெல்வேலி நெல்லை எக்ஸ்பிரஸ் (12631), சென்னை எழும்பூர் - செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ் (12661), சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் (12633) ஆகிய ரயில்கள் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து புறப்படுவதற்கு பதிலாக செங்கல்பட்டு ரயில் நிலையத்திலிருந்து புறப்படும்.

 





 






 

மாற்றுப்பாதையில் இயக்கப்படும்


 

ஆகஸ்ட் 15 மற்றும் 16 ஆகிய நாட்களில் இயக்கப்படும் திருநெல்வேலி - சென்னை எழும்பூர் நெல்லை எக்ஸ்பிரஸ் (12632), செங்கோட்டை - சென்னை எழும்பூர் பொதிகை எக்ஸ்பிரஸ் (12662), கன்னியாகுமரி - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் (12634) ஆகிய ரயில்கள் செங்கல்பட்டு ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும். ஆகஸ்ட் 14 அன்று கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் டில்லி நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் (12641) விழுப்புரம், வேலூர், காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.

 



திருநெல்வேலி -  கொல்கத்தா சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு 


 

அதே போல் திருநெல்வேலியில் இருந்து கொல்கத்தா ஷாலிமார் ரயில் நிலையத்திற்கு இயக்கப்படும் சிறப்பு ரயிலின் சேவை நீட்டிப்பு  செய்யப்பட்டுள்ளது. அதன்படி திருநெல்வேலி - ஷாலிமார் வாராந்திர சிறப்பு ரயில் (06087) திருநெல்வேலியில் இருந்து ஆகஸ்ட் 15, 22, 29, செப்டம்பர் 5 ஆகிய வியாழக்கிழமைகளில் அதிகாலை 01.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 09.00 மணிக்கு ஷாலிமார் சென்று சேரும். மறு மார்க்கத்தில் ஷாலிமார் - திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில் (06088) ஷாலிமாரிலிருந்து ஆகஸ்ட் 17, 24, 31, செப்டம்பர் 7 ஆகிய சனிக்கிழமைகளில் மாலை 05.10 மணிக்கு புறப்பட்டு திங்கட்கிழமை மதியம் 01.15 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும். இந்த ரயில்களில் 12 குறைந்த கட்டண குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், ஒரு  இரண்டாம் வகுப்பு மாற்றுத்திறனாளிகளுக்கானபெட்டிகள், ஒரு ரயில் மேலாளர் அறையுடன் கூடிய சரக்கு பெட்டி இணைக்கப்படும். இந்த ரயில்கள் கோவில்பட்டி, விருதுநகர், மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் கண்டோன்மெண்ட், காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர், நெல்லூர், ஓங்கோல், விஜயவாடா, எலுரு, ராஜமுந்திரி, சாமல் கோட், துவ்வாடா, சிமாச்சலம் வடக்கு, பென்டுர்டி, கோட்ட வலசா, விஜயநகரம், ஸ்ரீ கா குளம் ரோடு, பலாசா, பிரம்மாபூர், குர்தா ரோடு, புவனேஸ்வர், கட்டாக், ஜஸ்பூர் கியான்ஸ்ஹர்,  பட்ரக், பாலேஸ்வர், கரக்பூர், சந்தர காச்சி ஆகிய ரயில் நிலையங்கள் நின்று செல்லும். இந்த ரயில்களுக்கான பயண சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.