அதிமுக ஆலோசனைக் கூட்டம்


 

மதுரை அதிமுக புறநகர் கிழக்கு மாவட்ட கழகத் தகவல் தொழில்நுட்ப பிரிவின் ஆலோசனைக் கூட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருநகரில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவின் செயலாளர் வி.வி.ஆர்.ராஜ் சத்யன், எம்.எல்.ஏ., வி.வி.ராஜன்செல்லப்பா ஆகியோர் ஆலோசனை வழங்கினர்.

 

எடப்பாடி முதலிடம்


 

அப்போது ராஜ்சத்யன் பேசியதாவது...” இன்றைக்கு உலகமே உள்ளங்கை என்ற அளவில் செல்போன் தாக்கம் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் 8 கோடி அளவில் மொபைல் போன் பயன்படுத்துவதாக இருந்தாலும் அதில் அதிக அளவில் ஆண்ட்ராய்டு போன் கூறப்பட்டு வருகிறது. குறிப்பாக 30 ஆண்டுகளுக்கு முன்பாக பத்திரிக்கை, தொலைக்காட்சி, வானொலி போன்றவற்றின் மூலம் செய்திகளை  கேட்டு வந்தன அதனைத் தொடர்ந்து கம்ப்யூட்டர் வந்த பின்பு பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டது. வளர்ந்த நாடுகளுக்கு இணையாக தமிழக மாணவர்களின் கல்வி அறிவை அதிகரிக்க அம்மா மடிக்கணினி திட்டத்தை கொண்டு வந்தார். கடந்த எடப்பாடியார் ஆட்சி காலம் வரை 52 லட்சம் பேருக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது. கொரனா காலத்தில் கூட மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியவில்லை. அப்போது 9 லட்சம் மேற்பட்ட மாணவர்களுக்கு 2ஜி டேட்டாவை இலவசமாக எடப்பாடியார் வழங்கினார். தற்பொழுது மக்களிடத்தில் வலைதளங்கள் மூலம் சென்றடையும் பதிவுதான் முதல் இடத்தில் உள்ளது. ஏனென்றால் ஒரு செய்தியை ஒரே நிமிடத்தில் மக்களுக்கு சென்றடைய வகையில் வலைதளங்கள் முதன்மையாக உள்ளது. குறிப்பாக அமெரிக்க போன்ற  நாடுகளில் வலைதள பிரச்சாரங்கள் தான் அதிபரை  நிர்ணயம் செய்யும் வகையில் உள்ளது. தற்போது தமிழக அரசியலில் மக்கள் பிரச்னைகளை வலைதளங்கள் மூலமாக கொண்டு சென்ற தலைவர்கள் பட்டியலில் எடப்பாடியார் முதன்மையாக உள்ளார். சமீபத்தில் விழுப்புரம் மாவட்டத்தின் நடைபெற்ற கள்ளச்சாராயத்தில் பலியாகினர்கள். அப்பொழுது முதல் முதலாக வலைதளம் மூலம் எடப்பாடியார் எடுத்துரைத்த பின்பு தான் தமிழக அரசே விழித்துக் கொண்டது.

 

கவனமாக பதிவு செய்யவும்


 

தினந்தோறும் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் போடும் வலைதள பதிவுகளை எடுத்து அதை நாம் பதிவு செய்ய வேண்டும். குறிப்பாக உங்கள் பகுதியில் உள்ள வார்டுகள், கிளைகளில் உள்ள இளைஞர் இடத்தில் எடப்பாடியார் செய்த சாதனைத் திட்டங்களையும், திமுக அரசின் சொத்து வரி உயர்வு, மூன்று முறை மின் கட்டணம் உயர்வு, குடிநீர் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு, அதேபோன்று தமிழகத்தில் நடைபெறும் கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களை மக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். குறிப்பாக நீங்கள் வலைதளங்களில் ஒவ்வொரு பதிவுகளை பதிவு செய்யும் பொழுது கவனத்துடன் செய்ய வேண்டும். ஏனென்றால், நாம் போடும் பதிவுகளை மக்களுக்கு செல்லக்கூடாது என்று திமுக அரசு எப்படியாவது நம்மீது வழக்கு தொடுக்க முயற்சி செய்து வருகிறார்கள். அதனால் ஒவ்வொரு பதிவுகளையும் நன்கு ஆராய்ந்து போட வேண்டும். 2026-ல் அதிமுக வெற்றி பெற இணையம் வழியாகவும் கழகப் பணி செய்ய வேண்டும்” என பேசினார்.