வார விடுமுறை நாட்கள், பண்டிகை நாட்கள் விடுமுறை தினங்களில் கொடைக்கானலில் குவியும் சுற்றுலா பயணிகளால், நகர் பகுதிகளில் சுமார் 3 கிமீ தூரம் வரை சாலையின் இரு புறங்களிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து சுற்றுலா வாகனங்கள் செல்ல வேண்டிய சூழல் உள்ளதால் போக்குவரத்து நெரிசல் தொடந்து நடந்து வருகிறது.
மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் இயற்கை அழகை ரசிப்பதற்காகவும், குளிர்ச்சியான சூழலை அனுபவிப்பதற்காகவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்கள் வெள்ளி நீர்வீழ்ச்சி, நகரின் மையப்பகுதியில் உள்ள நட்சத்திர ஏரி, பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா ஆகியவற்றுக்கு சென்று பார்வையிடுகின்றனர். இங்கு வனத்துறை கட்டுப்பாட்டின் கீழ் மோயர் பாயிண்ட், பைன் மரக்காடு, பில்லர் ராக், குணா குகை, பேரிஜம் ஏரி ஆகிய இடங்களுக்கும் சுற்றுலாப் பயணிகள் சென்று வருகின்றனர்.
”எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு அறிக்கை, வேலுமணிக்கு மவுனமா?” EPS ஆடும் ஆட்டம் என்ன..?
பல்வேறு பண்டிகை தினங்கள் மற்றும் வார விடுமுறை என தொடர் விடுமுறை நாட்களில் கொடைக்கானலுக்கு அதிகமாக சுற்றுலா பயணிகள் வருகை தருவதுண்டு. குறிப்பாக கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருவார்கள். இதன் காரணமாக மூஞ்சிக்கள், கல்லறை மேடு ,ஏரிச்சாலை, அப்சர் வேட்டரி, உகார்த்தே நகர், செண்பகனூர் மற்றும் முக்கிய நகர் பகுதிகளில் சாலைகளின் இரு புறங்களிலும் நீண்ட வரிசையில் சுற்றுலாப்பயணிகளின் வாகனங்கள் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு நீண்ட வரிசையில் அணிவித்து ஊர்ந்து செல்கின்றன, இதனால் சுற்றுலாப்பயணிகள் மட்டும் இல்லாமல் பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
Breaking News LIVE : சூர்யா நடிக்கும் கங்குவா படத்தின் ரிலீஸ் தேதி நவம்பர் 14 என அறிவிப்பு
இந்த நிலையில் கொடைக்கானலில் நிலவும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். குறிப்பாக ஏரிச்சாலை, சன் கார்னர், ஏழு ரோடு மற்றும் மூஞ்சிக்கல் பகுதிகளில் நேரில் ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அனைத்து துறை அரசு அதிகாரிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள், உள்ளூர் வாகன ஓட்டிகள் ஆகியோரிடம் கலந்துரையாடல் நடத்தினார்.
”தொழிலாளர்களை விவசாயிகளாக மாற்றி புரட்சி செய்த புது ஆறு” இப்போ வயசு 91ங்க!!!
இதில் புதிய மாற்று பாதை, ஒரு வழி பாதை , சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றுவது, கூடுதல் காவல் துறையினரை பணியில் அமர்த்துவது, நுழைவு கட்டணம் வசூலிக்க படும் இடங்களில் மாற்று ஏற்பாடு செய்வது குறித்தும், புதிய அறிவிப்பு பலகைகள் அமைப்பது குறித்தும், சுற்றுலா கனரக வாகனங்களுக்கு பார்க்கிங் வசதி அமைப்பது , பகல் வேளைகளில் கனரக வாகனங்களுக்கு தடை விதிப்பது, போன்றவைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. இது குறித்து விரைவில் முழு விபரத்தினை தெரிவிக்க உள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார். இதில் கருத்து கேற்பு கூட்டத்தில் கோட்டசியர்,மாவட்ட உதவி வன அலுவலர்,காவல் துணை கண்காணிப்பாளர் ,நெடுஞ்சாலை துறையினர், காவல் ஆய்வாளர்,நகராட்சி ஆணையாளர், வட்டாட்சியர் ஆகியோர் கலந்து கொண்டனர்.