இந்தியாவின் பெரும்பாலான நீர்த்தேவையை பூர்த்தி செய்வதில் பருவமழைகாலங்களில் பெய்யும் மழை ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. முக்கிய மழை பருவமான, தென் மேற்கு பருவ மழை, வடகிழக்கு பருவ மழை வழியாகவே, நாடு முழுவதுக்கும் தேவைப்படும் நீரின் அளவு பெரும்பாலும் பூர்த்தியாகிறது. வேளாண்மை மற்றும் குடிநீர் போன்றவற்றுக்கு, நாட்டின் பெரும்பாலான மாநிலங்கள், பருவ மழையையே நம்பியுள்ளன. கேரள, கர்நாடக மாநிலங்கள் தமிழ்நாட்டை காட்டிலும் அதிகமாக பலன் பெற்றாலும், இந்த இருமாநிலங்களிலும் பெய்யும் மழையானது ஆறுகள் வழியாக தமிழ்நாட்டை வந்தடைகின்றன. இந்த ஆண்டுக்கான மழை நிலவரம் குறித்த, நீண்ட கால கணிப்பை, இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது அதன்படி, தற்போது வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது.
TN Rain News LIVE: முன்கள வீரனாகத் துணை நிற்பேன் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இந்த நிலையில், தமிழக கேரள எல்லையில் உள்ள முல்லைப் பெரியாறு அணையில் செய்து வேண்டிய பாதுகாப்பு மற்றும் செய்யவேண்டிய முன்னேற்பாடுகள் பணிகள் குறித்தும் நாளை துணை கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்கின்றனர். முல்லைப்பெரியாறு அணை தொடர்பான வழக்கில், பெரியாறு அணையை கண்காணித்து பராமரிக்க, மூன்று பேர் கொண்ட 'கண்காணிப்பு குழுவை" உச்சநீதிமன்றம் நியமித்தது. அதன் பின் உச்சநீதிமன்றம் கண்காணிப்பு குழுவில் இரு மாநில தொழில் நுட்ப வல்லுனர்களையும் சேர்க்க அறிவுறுத்தியது.
தற்போது இந்த ஐவர் குழுவின் தலைவராக மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளரும், அணைகள் பாதுகாப்பு அதிகாரியுமான ராகேஷ் கஷ்யாப் உள்ளார். இந்தகுழுவிற்கு உதவியாக துணை கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு அதன் தலைவராக கொச்சியிலுள்ள மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் சதீஷ் உள்ளார். தமிழக பிரதிநிதிகளாக பெரியாறு சிறப்பு கோட்ட கண்காணிப்பு பொறியாளர் சாம் இர்வின், உதவி செயற்பொறியாளர் குமார், கேரள பிரதிநிதிகளாக கட்டப்பனை நீர்ப்பாசன செயற்பொறியாளர் அனில்குமார், உதவி பொறியாளர் கிரண் ஆகியோர் உள்ளனர்.
இக்குழுவினர் கடந்த ஜூலை மாதம் பெரியாறு அணையை ஆய்வு செய்தனர். இந்நிலையில், தற்போது பருவமழை தொடங்கி உள்ள நிலையில், அணையில் செய்துவரும் வழக்க பணிகளையும், செய்யப்பட வேண்டிய பணிகள் குறித்தும் இந்த துணை குழுவினர் நாளை ஆய்வு செய்கின்றனர். கடந்த மாதம் ஜூன் 13 ல் உயர்நிலை கண்காணிப்பு குழுவினர் பேபி அணையை பலப்படுத்தும் பணிக்கு இடையூறாக உள்ள வெட்டப்படவேண்டிய மரங்கள் குறித்தும், அவை என்ன மரங்கள் என்பது குறித்தும் பார்வையிட்டு ஆய்வு செய்ததன் அடிப்படையில், பேபி அணையை பலப்படுத்த உள்ள அடுத்தகட்ட பணிகள் குறித்த முக்கிய ஆய்வாக இது இருக்கும் என தெரிகிறது.