மதுரை மாநகராட்சியின் புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட ஆணையாளர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது..,” மதுரை மாநகராட்சியில் துறை வாரியாக ஆலோசனை நடத்தியுள்ளேன், மாநகராட்சி பகுதகளில் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை திட்டங்களை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம்.







 

மதுரை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி பாக்கியை செலுத்தாத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவுள்ளோம். மதுரை நகரத்தின் அழகை மேம்படுத்த தொண்டுநிறுவனங்களுடன் இணைந்து  பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவுள்ளோம்.





 






மாநகராட்சி வார்டு பகுதிகளில் சாலை பணிகளை முறையாக மேற்கொள்ள உள்ளோம். தூய்மை பணியாளர்கள் பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு எட்டப்படும்.  ஸ்மார்ட் சிட்டி பணிகள் துரிதமாக்கப்படும், தொடர்ந்து கண்காணிக்கப்படும்.  பொதுமக்கள் புகார் அளிப்பதற்காக மொபைல் செயலி வசதி மேம்படுத்தப்படும்  எனவும் தெரிவித்தார்.

 

மதுரை மாநகராட்சியின் புதிய ஆணையராக பொறுப்பேற்றுள்ள சிம்ரன் ஜீத் சிங் காலோன் அவர்களுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தூய்மை பணியாளர் பிரச்னை, ஸ்மார்ட் சிட்டி பணிகள், அம்மா உணவகங்கள் உள்ளிட்ட மாநகராட்சி பிரச்னைகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.