தேனி மாவட்ட நிர்வாகம், தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தேனி மாவட்ட ஊரக மற்றும் நகர்ப்புற இயக்கம் இணைந்து கம்பம் நகரில் உள்ள ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வரும் 19ஆம் அன்று ஞாயிற்றுக்கிழமை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும்.

Continues below advertisement





முகாமில் தமிழகம் முழுவதும் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு பணியாட்களை தேர்வு செய்த உள்ளார்கள். இம்முகாமில் கலந்து கொள்ள கல்வித்தகுதி எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை மற்றும் ஐடிஐ, டிப்ளமோ, பி.இ, நர்சிங், பார்மசி, டைலரிங், டிரைவர் மற்றும் இதர கல்வித் தகுதியுடைய அனைவரும் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் பங்கேற்க எவ்வித கட்டணமும் இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.




காவல் உதவி ஆய்வாளர் சக்திவேல் தனது வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு நடத்தி அதற்கு பிடித்த 5 வகை உணவுகளை ஊட்டியது பேசுபொருளாகியுள்ளது


இந்த தனியார்துறை வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விருப்பமான வேலைதேடும் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் தங்களது அனைத்து கல்வி சான்றிதழ்களின் நகல்கள் குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், ஆகியவற்றுடன் கலந்து கொண்டு தனியார் துறைகளில் வேலை வாய்ப்பு பெற கேட்டுக் கொள்ளப்படுகிறது.




’’லோக்சபா ஒத்திவைப்பு தீர்மானத்தில் முல்லை பெரியாறு அணை பிரச்சினையை கிளப்ப கேரள எம்.பி.க்கள் திட்டமிட்டுள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது’’


மேலும் இம்முகாமில் பங்கேற்க விரும்பும் உள்ளவர்கள் வேலைவாய்ப்பு துறையின் இணையதளம் www.tn.privatejobs.tn.go.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இம் முகாமில் பங்கேற்று பணியாட்களை தேர்வு செய்ய விரும்பும் தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் வேலை நாடுநர்கள் இம்முகாம் தொடர்பான தகவல்கள் அறிய thenideojobmela@gmail.com அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தொலைபேசி 04546 254510 எண் என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயனடையுமாறு தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு முரளிதரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 


ட்விட்டர் பக்கத்தில் தொடர