முல்லை பெரியாறு அணை விவகாரம் - நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப கேரள எம்.பிக்கள் முடிவு

’’லோக்சபா ஒத்திவைப்பு தீர்மானத்தில் முல்லை பெரியாறு அணை பிரச்சினையை கிளப்ப கேரள எம்.பி.க்கள் திட்டமிட்டுள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது’’

Continues below advertisement

தேனி , திண்டுக்கல், மதுரை , ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் நீர் ஆதாரமாக விளங்கும் முல்லை  பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழகத்திலும் , கேரள மாநிலத்திலும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருது தொடர்கதையாகி வருகிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி 136 அடியிலிருந்து 142 அடி வரை அணையின் நீர் மட்டத்தை உயர்த்திக்கொள்ளலாம் என தீர்ப்பின் அடிப்படையில் இதுவரையில் இந்த மாதம் வரையில் இது வரையில் 4 முறை 142 அடி நீர்மட்டம் வரை நீர் தேக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement


இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் இறுதியில் 136 அடியை நீர்மட்டம் எட்டிய நிலையில், தமிழகத்திற்கு தெரியாமல் Rule Curve விதிமுறைப்படி அணையிலிருந்து நீர் திறந்து விட்டதற்கு தமிழக மக்களிடையே எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில்  சில தினங்களுக்கு முன்பு கேரள மாநிலத்தில் முல்லை பெரியாறு அணை பலவீனமாக உள்ளது அதை இடித்துவிட்டு வேறு இடத்தில் புதிய அணை கட்ட வேண்டுமென கோரிக்கையை வலியுறுத்தி கேரளாவை சேர்ந்த கட்சியினர் மற்று பொதுமக்கள் ஒரு நாள் உண்ணாவிரதப்போராட்டம், சைக்கிள் பேரணி என நடத்தினர்.


இந்த நிலையில் லோக் சபா ஒத்திவைப்பு தீர்மானத்தில் முல்லை பெரியாறு அணை பிரச்சினையை கிளப்ப கேரள எம்.பிக்கள் திட்டமிட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து எம்.பி.குரியகோஸ் அவை செயலருக்கு மனு அளித்துள்ளார். அந்த மனுவில் முல்லை பெரியாற்றில் அதிகபட்சமாக அனுமதிக்கப்பட்ட நீர்மட்டம் 142 அடியாகும். நீர் மட்டத்தை கட்டுப்படுத்துவதற்கும் ஒழுங்குபடுத்துவதற்கும், இரண்டு சாத்தியமான விருப்பங்கள் உள்ளன. ஒன்று, தமிழகம் தங்கள் பக்கம் போதுமான தண்ணீரை எடுத்துச் செல்ல வேண்டும். இரண்டு, உபரி நீர் வழியாக கீழ்நோக்கி வெளியேறும். தற்போது இந்த இரண்டு நடவடிக்கைகளும் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.


இந்த நிர்வாகத்தில் கேரள மாநிலத்துக்கு எந்தப் பங்கும் இல்லை. இதனால் கீழக்கரையில் வசிக்கும் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாகவும். இன்று அதிகாலை நள்ளிரவுக்குப் பிறகு அதிகாலை 2.30 மணிக்கு முல்லைப் பெரியாற்றின் உபரிநீர் வழியாக 8,000 கனஅடி நீர் எந்த அறிவிப்பும் இன்றி திறந்துவிடப்பட்டதாகவும். இதனால் தவிர்க்க முடியாத வெள்ளம் மற்றும் சொத்துக்கள் இழப்பும் ஏற்பட்டுள்ளது. இது முதல் நிகழ்வு அல்ல எனவும், இது ஒரு தொடர் கதையாக இருந்து வருகிறது. இதற்கு தீர்வு காண, எந்த முயற்சியும் எடுக்கவில்லை. பகல் நேரத்தில் அணையை திறப்பதில் என்ன தடை இருக்கிறது என்று புரியவில்லை. குறைந்தபட்சம் தமிழகம் இதை மனிதாபிமானப் பிரச்சினையாகக் கருத வேண்டும். ஒன்று, அணை கட்டமைப்பு ரீதியாக நிலையற்றது. இரண்டாவதாக, அதன் செயல்பாடு பாதுகாப்பற்ற முறையில் உள்ளது’ என அவர் குறிப்பிட்டு மனு ஒன்றை அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஏபிபி நாடு செய்திகளை தொடர்ந்து பெற கீழ்கண்ட லிங்கை க்ளிக் செய்யவும்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூப்பில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola