pongal 2022 | பொங்கல் பண்டிகைக்கான ஏற்பாடு.. இணைக்கப்படும் சிறப்பு பெட்டிகள்..தெற்கு ரயில்வே அறிவிப்பு
அருண் சின்னதுரை | 10 Jan 2022 09:24 PM (IST)
ரயில் பயணிகள் வசதிக்காக இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள் இணைக்கப்பட இருக்கின்றன
சிறப்பு_ரயில்_பெட்டி
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக நாகர்கோவில் - கோயம்புத்தூர் - நாகர்கோவில் இரவு நேர எக்ஸ்பிரஸ் ரயில்களில் இரண்டு இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள் இணைக்கப்பட இருக்கின்றன.
அதன்படி ஜனவரி 12, 13 ஆகிய நாட்களில் கோயம்புத்தூரில் இருந்து புறப்படும் வண்டி எண் 22668 கோயம்புத்தூர் - நாகர்கோவில் இரவு நேர எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் ஜனவரி 13, 14 ஆகிய நாட்களில் நாகர்கோவிலில் இருந்து புறப்படும் வண்டி எண் 22667 நாகர்கோவில் - கோயம்புத்தூர் இரவு நேர எக்ஸ்பிரஸ் ரயில் ஆகியவற்றில் இரண்டு இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள் இணைக்கப்படும்.
மேலும் கோயம்புத்தூர் - மயிலாடுதுறை - கோயம்புத்தூர் ஜன்சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் இரண்டு இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகளும் மற்றும் சேலம் - சென்னை எழும்பூர் - சேலம் எக்ஸ்பிரஸ் ரயிலில் இரண்டு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகளும் இணைக்கப்பட இருக்கின்றன.
பொங்கல் பண்டிகை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக பல்வேறு வசதிகளை ரயில்வே நிர்வாகம் செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்