தை பொங்கலை முன்னிட்டு வரும் 14, 15, 16 ஆகிய தேதிகளில் உலக புகழ்பெற்ற அவனியாபுரம், பாலமேடு,  ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது.  இந்நிலையில் வரும் 16ம் தேதி அரசு சார்பில்  நடைபெற உள்ள உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாட்டு பணிகள் முகூர்த்தகால் நடப்பட்டு துவங்கியது.
  வாடிவாசல் அருகேயுள்ள முத்தாலம்மன் கோவிலில் சிறப்பு பூஜை செய்த பின்னர் விழா கமிட்டியினர்  முகூர்த்த கால் நட்டனர். இதனை தொடர்ந்து வாடிவாசலில் வர்ணம் தீட்டுவது, கேலரி அமைப்பது காளைகளுக்கான மருத்துவ பரிசோதனை செய்யுமிடம், காளைகள் நிறுத்தி வைக்கும் இடத்தை தயார் செய்யும் பணிகள் துவங்க உள்ளது. 

 

இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக தமிழ்நாடு அரசு ஜல்லிக்கட்டு போட்டி கட்டுப்பாடுடன் நடத்துவது குறித்து அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர்  ஜல்லிக்கட்டு நடத்துவது  தொடர்பாக  மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் தலைமையில் நடைபெற்று வருகிறது. இதில் பத்திரப் பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் பி. மூர்த்தி, தென் மண்டல ஐஜி அன்பு, மாவட்ட எஸ்பி பாஸ்கரன் மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், அனைத்து துறை அரசு அதிகாரிகள் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் கமிட்டியினர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து


செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பி.மூர்த்தி கூறுகையில்...,” தமிழ்நாடு முதல்வர் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு சில விதிகளுக்கு உட்பட்டு வழங்கி உள்ளார். தமிழ்நாடு அரசு அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய மூன்று ஜல்லிக்கட்டு நடக்க அனுமதி வழங்கி உள்ளது. இந்த ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது பற்றிய ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர்  தலைமையில், மாநகராட்சி ஆணையர், தென் மண்டல, உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர். ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ளும் காளைகளை ஆன்லைனில்  முன்பதிவு செய்ய வேண்டும். ஒரு ஜல்லிக்கட்டு போட்டியில்  300  மாடு  பிடி வீரர்களுக்கு மிகாமலும்,150 உள்ளுர் பார்வையாளர்கள் மட்டும் கலந்து கொள்வர்கள், மற்றவர்கள் கலந்து கொள்ள இயலாது.




அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் காளையர்களுக்கு மற்ற இரண்ட போட்டியில் பங்கேற்க இயலாது, பாலமேடு ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் காளையர்களுக்கு மற்ற  இரண்டு போட்டியில் பங்கேற்க இயலாது, அதே போல் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் காளையர்களுக்கு மற்ற இரண்ட போட்டியில் பங்கேற்க இயலாது, போன்ற கொரோனா கட்டுப்பாடுகளுடன் போட்டிகள் நடைபெறும். அங்கு வரும் மாடுபிடி வீரர்கள்  இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். அதேபோல் காளையுடன் வரும் மாட்டின் உரிமையாளர், உதவியாளர் கட்டாயம் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். கொரோனா பரிசோதனை செய்து நெகடிவ் சான்றிதழ் கட்டாயம் வைத்து இருக்க வேண்டும்.  வெளியூர், வெளி மாநிலத்தை சேர்ந்த பார்வையாளர்கள் பங்கேற்க  அனுமதி இல்லை.




 நாளை முதல் அந்தந்த பகுதிகளில்  உள்ள காளை மற்றும் மாடுபிடிவீரர்கள் ஈ- சேவை மையங்களுக்குச் சென்று பதிவு செய்து கொள்ளலாம். மொத்தமாக 150 பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர். பத்திரிக்கை, தொலைக்காட்சி செய்தியாளர்களுக்கு தனி இடம் ஒதுக்கீடு செய்யப்படும். முறைகேடு இல்லாத வகையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்படும், போட்டியில் பங்கேற்கும் ஜல்லிக்கட்டு மாடுகள் குறித்த தகவல் முந்தைய நாள் தெரிவிக்கப்படும் இதன் மூலம் ஜல்லிக்கட்டு போட்டியில் நடைபெறும் முறைகேடு தடுக்கப்படும். பரிசு பொருட்கள் வழங்குவது குறித்து அந்தந்த கிராம கமிட்டியினர்தான் முடிவு செய்வார்கள்.




அவனியாபுரம் ஜல்லிக்கட்டை  மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் நடத்தும். இரண்டு தரப்பும் ஒன்று சேர்ந்து வந்தால்  ஜல்லிக்கட்டு கமிட்டி போட்டி நடத்த அனுமதிக்கப்படும். தற்போது மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான பணியை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.


இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Sivaganga | ஆண்கள் காது வளர்க்கணும்... ஏன்னா வரலாறு அப்படி.! சிவகங்கை செகுட்டை அய்யனாரும் நம்பிக்கையும்!