சிலம்பு எக்ஸ்பிரஸ் - கூடுதலாக ஆறு ரயில் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளது




 

பண்டிகை கால விடுமுறை கூட்ட நெரிசலை சமாளிக்க பயணிகளின் வசதிக்காக செங்கோட்டை - தாம்பரம் - செங்கோட்டை வாரம் மும்முறை சேவை சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில்களில் (20681/20682) கூடுதலாக ஆறு ரயில் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளது. அதன்படி இந்த ரயில்களில் நவம்பர் 27 முதல் ஜனவரி 30 வரை கூடுதலாக ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி, 2 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு தூங்கு வசதி பெட்டிகள், ஒரு இரண்டாம் வகுப்பு பொது பெட்டி ஆகியவை  இணைக்கப்பட உள்ளது.

 


 

கூடுதலாக 6 பெட்டிகள் இணைக்கப்படும் 


 

தற்போது இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன முதல் வகுப்பு பெட்டி, ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி, 2 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 8 இரண்டாம் வகுப்பு தூங்கு வசதி பெட்டிகள், 3 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் என 17  பெட்டிகளுடன் இயங்கி வருகிறது. மேலும் கூடுதலாக 6 பெட்டிகள் இணைக்கப்படுவதால் மொத்தம் 23 பெட்டிகளுடன் இயங்க இருக்கிறது. இதே போல நவம்பர் 27 முதல் ஜனவரி 30 வரை  தாம்பரம் - நாகர்கோவில் - தாம்பரம் மும்முறை சேவை எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் (22657/22658) கூடுதலாக 6 பெட்டிகள் இணைக்கப்பட்டு மொத்தம் 23 பெட்டிகளுடன் இயக்கப்படும்.