எத்தனை முறை சொன்னாலும் திருந்தப்போவதில்லை, தமிழ்ப் பண்பாட்டை அவமதிக்கும் செயலை கைவிடுங்கள் !!! பொங்கல் மற்றும் உழவர் திருநாளில் அறிவிக்கப்பட்டுள்ள CA FOUNTATION தேர்வுககளின் தேதிகளை மாற்றக் கோரி மத்திய அரசுக்கு  மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கடிதம் மூலம் வலியுறுத்தல்.


CA படிக்கும் மாணவர்களுக்கான - CA FOUNTATION தேர்வு

 

நாடு முழுவதும் CHARTED ACCOUNTS எனும் CA படிக்கும் மாணவர்களுக்கான CA FOUNTATION தேர்வு 2025 ஜனவரி 12 ஆம் தேதி முதல் 18- ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது. தமிழகத்தில் இந்த தேர்வானது சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி என 28 தேர்வு மையங்களில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த CA FOUNTATION தேர்வுகளான BUSINESS LAWS தேர்வு பொங்கல் பண்டிகையான 14 ஆம் தேதியும், Quantitative Aptitude தேர்வுகள் 16ஆம் தேதியும் மாலை 2 மணி முதல் 5 மணிவரை நடைபெறுவுள்ளது. 

 

 





 

பொங்கல் பண்டிகை மற்றும்  உழவர் திருநாள்

 

இந்நிலையில் CA fountation தேர்வுக்காக விண்ணப்பித்துள்ள தேர்வர்கள் மற்றும் தேர்வர்களின் பெற்றோர்களும் வடமாநிலங்களில் கொண்டாடப்படும் ஹோலி மற்றும் துர்காபூஜை போன்று தமிழகத்தின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகை மற்றும்  உழவர் திருநாள் கொண்டாடப்படுவதால் 14 மற்றும் 16 ஆம் தேதிகளில் அறிவிக்கப்பட்டு தேர்வு தேதிகளை மாற்றி அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துவருகின்றனர். இது தொடர்பாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் CA FOUNTATION தேதியை மாற்றி அமைக்க கோரி மத்திய நிதியமைச்சர் மற்றும் ICAI தலைவர் ரஞ்சித் குமார் அகர்வால் ஆகிய இருவருக்கும் கடிதம் மூலமாக வலியுறுத்தியுள்ளார்.

 

மதுரை எம்.பி  சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்

 

அவர் எழுதியுள்ள கடிதத்தில்...,"சி.ஏ.பவுண்டேஷன் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்களின் பெற்றோர் பலர் தன்னை தொடர்பு கொண்டனர்., தமிழ்நாட்டின் மக்கள் திருவிழாவான பொங்கல் (14.11.2024) அன்றும், உழவர் திருநாள் (16.11.2024) அன்றும் முறையே Business laws மற்றும் Quantitative Aptitude தேர்வுகள் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளன. "அறுவடைத் திருநாளான" பொங்கல் திருவிழா என்பது தமிழ்நாட்டின் தனித்துவமிக்க பண்பாட்டுத் திருவிழா என்பதை கருத்தில் கொண்டு தேர்வர்களுக்கு சிரமங்கள் இன்றி தேர்வு அட்டவணையை மாற்றி அமைக்குமாறும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இது தொடர்பான தனது X தளத்தில் பதிவிட்டுள்ள சு.வெங்கடேசன்

"பொங்கல் திருநாள் அன்று தேர்வுகள்."

"எத்தனை முறை சொன்னாலும் திருந்தப்போவதில்லை." 

"அதற்காக நாம் ஓயப்போவதுமில்லை." 

"ஒன்றிய அரசே, தேர்வு தேதியை உடனே மாற்று."

"தமிழ்ப் பண்பாட்டை அவமதிக்கும் செயலை கைவிடு." என்றும் பதிவிட்டு மத்திய அரசுக்கு தான் எழுதிய கடிதத்துடன் பதிவிட்டுள்ளார்.