மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் புலிகள் காப்பக இணை இயக்குனர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

 

சொரிமுத்து அய்யனார் கோவில்:

 

திருநெல்வேலி சேர்ந்த கணேசன்  உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், சொரிமுத்து அய்யனார் கோயில் திருநெல்வேலி மாவட்டத்தில் பாபநாசத்துக்கும் காரையார் அணைக்கும் இடையே உள்ள அடர்ந்த காட்டில் முண்டந்துறை காப்புக் காட்டில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு திருநெல்வேலி மாவட்டம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

 

இங்கு ஆடி அமாவாசை, மஹாளய அமாவாசை, தை அமாவாசை போன்ற விசேஷ நாட்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமாக திரளான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வழிபாடு நடத்துவார்கள். காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா 15 நாட்கள் கொண்டாப்படும். ஆடி அமாவாசைக்கு 7 நாட்களுக்கு முன்பும், ஆடி அமாவாசைக்குப் பிறகு 7 நாட்களும் கொண்டாடப்படுகிறது. 

 




 

 

பக்தர்கள் சிரமம்:

 

குறிப்பாக, ஆடி அமாவாசையிலிருந்து 7 நாட்களுக்குப் பிறகு, ஏராளமான பக்தர்கள் கோயிலில் கூடாரங்கள் அமைத்து தங்கள் பிரார்த்தனைகளைச் செய்வார்கள். இந்த நிலையில் முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குநர் காரையார் சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆகஸ்ட் 15, 16, 17 ஆகிய மூன்று நாட்கள் மட்டுமே வழிபட அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.

 

மேலும் 13, 14 மற்றும் 19, 20 கோவிலில் தூய்மை பணி நடைபெறுவதால் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது. புலிகள் காப்பக துணை இயக்குநர் உத்தரவால் பக்தர்கள் தங்களது உடமைகளோடு 15 கி.மீ., துாரம் உள்ள மலையில் உள்ள கோவிலுக்கு நடந்து செல்ல வேண்டியுள்ளது.  பேருந்தில் கனமான சாமான்கள் மற்றும் ஆடுகள், சேவல்களை கொண்டு செல்ல முடியாத நிலையும் உள்ளது.



வழக்கு:

 

புலிகள் காப்பக இணை இயக்குநரின் கட்டுப்பாடுகள் பக்தர்களுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே பக்தர்களுக்கு ஏற்படும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு, தனியார் வாகனங்களை கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும், பக்தர்களை 18, 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் வழிபட அனுமதிக்க வேண்டும் என தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

 

இந்த மனு  நீதிபதிகள் சுந்தர், பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. பக்தர்கள் அனுமதிப்பது குறித்து புலிகள் வன காப்பகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் தான் முடிவு செய்ய முடியும் அவர்களுக்குத்தான் அங்கு உள்ள நிலை தெரியும் என கருத்து தெரிவித்த நீதிபதிகள் மனு குறித்து மாவட்ட ஆட்சியர் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்தி வைத்தார்.

 





ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

 


 








ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண