1. ராமநாதபுரம் மாவட்டம், நயினார்கோவில் ஒன்றியம், பி. கொடிக்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் கிளியூர் கிளையில் 1.47 கோடி ரூபாய்க்கு, போலி நகைகள் அடகு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த முறைகேடு தொடர்பாக, சங்க செயலர் இளமதியன், துணை செயலர் முருகேசனை, 'சஸ்பெண்ட்

 

2. ராமேஸ்வரம் பாம்பன் சாலை பாலத்தின் உறுதித்தன்மை குறித்து தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர். சுரங்கப்பாதை மூடியை திறக்க முடியாததால் ஏமாற்றம் அடைந்தனர்.

 

3. தூத்துக்குடியில் குரூஸ் பர்னாந்து திருவருவச்சிலைக்கு கனிமொழி எம்.பி மற்றும் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

 

4. தொடர்மழை காரணமாக நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 8000 நாட்டுப்படகு மீனவர்கள் 7 ஆவது நாளாக இன்று கடலுக்கு செல்லவில்லை.

 

5. உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

 

6. மதுரையில் இதுவரை 45 ரவுடிகள் உட்பட 82 பேர் மீது குண்டர் சட்டத்தில் கைது 

 

7. முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 140 அடியை எட்டியதால் அணையை எட்டியதால் வல்லக்கடவு, வண்டிபெரியாறு ஆற்றின் கரையோர பகுதியில் வசிப்பவர்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

 

8. ஊரக உள்ளாட்சி தேர்தலின் வெற்றியை தொடர்ந்து நகர்புற உள்ளாட்சி தேர்தலும் அதிக இடங்களில் போட்டியிட முடிவெடுத்திருப்பதாக நெல்லை மாவட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள்   ஆலோசனை கூட்டத்தில் முடிவு 

 

9. சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே கரோனா தடுப்பூசி முகாமில் ஊழியர்களுக்கு வழங்கிய இட்லி, சாம்பாரில் பல்லி இருந்ததால் 3 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து உணவு வழங்கிய ஹோட்டலுக்கு சீல் வைக்கப்பட்டது.

 

10. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே ஊஞ்சனை புதுவயலைச் சேர்ந்தவர் பாண்டியன்  என்பவரின் காரில் பெட்ரோல் பங்க் ஊழியர் பெட்ரோலுக்கு பதிலாக டீசலை நிரப்பிய நிலையில் மெக்கானிக் மூலம் டீசலை அகற்றியபோது கார் தீப்பிடித்தது